வலையுலக நண்பர்கள்

Monday, November 07, 2011

வான் சிறப்பு-002


11,  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

Wednesday, November 02, 2011

கடவுள் வாழ்த்து -0011,அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி 
   பகவன் முதற்றே உலகு.
     அகரம் எழுத்துக்களுக்க்கு முதன்மை,ஆதிபகவன்-உலகில் வாழும்                                                                       உயிர்களுக்கெல்லாம் முதன்மை,,,,,,,,,,

Sunday, August 14, 2011

கொல்..ன்னு சிரிங்கன்னா ,,,,,,,,,,,பெத்த பொன்னுக்கும் எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

   ரெண்டுய்ம் கட்டி குடுக்கரக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்..........

பெத்த பையனுக்கும்  எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

  ரெண்டையும் திருத்தவே முடியாது ,,,

Sunday, July 24, 2011

முதியோருக்கு இளையோர் தரும் பரிசு ........


பழுத்த இலையை பார்த்து குருத்து இலை பழித்ததாம். அதற்க்கு பழுத்த இலைபதில் சொல்லாது சிரித்ததாம். சில நாட்களில் அந்த குருத்து இலை பழுத்ததாம். இப்போது அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்ததாம்...............

நேற்று:

இடுகையிட்டு ஆறு நாளகிருச்சு, ஏதாவது எழுதலான்ன ஒரு விசயமும் கிடைக்கல, இப்படித்தான் பாருங்க ஏதாவது நம்ம போட்டோசயாவது வெளியிடலான்னு நேத்து ராத்திரி உக்காந்தேன். மனசுக்கு எதுவும் சரிப்பட்டுவரல, சரி followeroda இடுகைய பாத்து கமாண்டாவது கொடுக்கலான்னு, அப்படியே வலை மேய்ந்து கொண்டிருந்தேன்.

சுமார் பதினோரு மணி இருக்கும்.போன் எனது favorit ரிங் டோனான,

Sunday, July 17, 2011

வல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு

     xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மிகப்பெரிய குத்துச்சண்டை வீரரொருவர் தனது சொந்த வேலை விஷயமாக, அருகிலிருந்த பெரிய நகரத்திற்கு சென்றார், அனால் அன்று பார்த்து அவருக்கு வயிறு வேறு சரி இல்லை . போகிற வழியில் பொது கழிப்பிடத்தை பார்த்தவர், சரி இந்த வேலையை முடித்து விடுவோமென தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு கழிப்பிடத்திர்க்குள்  சென்றார்.

ஆனால் அவர் அணிந்திருந்த ஓவர் கோட் அவருக்கு சிரமமாக இருந்தது, சரி இதை என்ன செய்யலமெனே யோசித்தவர், சட்டென அந்த கழிப்பிடத்தின் நுழைவு வாயிலருகே  இருந்த ஆணியில் அந்த ஓவர் கோட்டை மாட்டிவிட்டு அது பாதுகாப்பாகஇருக்க  வேண்டுமென்பதற்காக  அதனருகில்  ஒரு  வாசகத்தை  எழுதி  வைத்தார்,
அது என்னவென்றால் ஒரு குத்து சண்டை வீரன் உள்ளே போயிருக்கிறான்  திரும்பி  வருவான்.

Friday, July 15, 2011

தாய் பா(சத்தின்)லின் கடன்                          

 மத்தியான வெய்யில் சுருக்கென்று அடித்தது யோசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் கௌதமன், என்ன செய்வது பட்டகஷ்டத்திர்கெல்லாம்
   பலனே இல்லையே நமது விதி இதிதானா நினைவுகள் இப்படி போய்கொண்டிருக்க,  கௌதமனைபற்றிய சுருக்கம் வீட்டில் ஒரேபையன் அவன் அப்பா ஏதோ ஒரு விபத்தில் இவன் பிறந்து சில மாதங்களிலேயே  போய்சேர்ந்து விட்டார், இவன் தாயார் படாத பாடெல்லாம் பட்டு இவனை ஒரு டிகிரி வரை படிக்க வைத்து விட்டால், அவளால் முடிந்தது அவ்வளவுதான், அதற்கே அவள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமல்ல, தன்னந்தனியாக ஒரு பெண்ணால் எவ்வளவு கஷ்டபடமுடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு விட்டால், கௌதமனும் அவன் தாயின் நிலையை நினைத்து சிறு வயது முதலே கவனமாக படித்து இன்று எம்.ஏ வரை படித்து விட்டன். படித்து என்ன செய்வது சரியான வேலை அமையவில்லையே, ஏறாத கம்பனியில்லை, கேட்காத ஆள் இல்லை ம்ம்ஹூம் ....ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. சரி வேருஎதவது  செய்யலாமென்று சிலநாள் கூலி வேலைக்கு கூடசென்றான் அனால் அதில் வந்த வருமானம் அவன் தாயின் மருத்துவ செலவுக்கு கூட போதவில்லை. இதுவரை எந்த ஒரு சுகத்தையும் பாராமல் தன் மகனின் எதிர்கலத்திர்க்காக பாடுபட்ட அந்த தாயின் வாழ்க்கை இப்போது முடியும் தருவாயில் உள்ளது கடைசியாக இன்று காலை அவர்களுக்காக மனமிரங்கிய ஒரு டாக்டர் வந்து பார்த்துவிட்டு கௌதமா உன் அம்மாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது ,
எப்படியாவது இந்த மருந்தை வாங்கி வந்து விடு எனக்கூறி ஒரு மருந்து சீட்டில் சில மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு மாலை வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றார். இருந்த பணத்தையும் டாக்டருக்கு கொடுத்தாகி விட்டது . இனிமருந்து வாங்க என்ன செய்வது என புரியாம அவர்கள் தங்கி இருந்த குடிசையிலிருந்து நடந்தே பல தூரம் வந்து விட்டான். இப்போது பல யோசனையோடு  நடந்து சென்று கொண்டிருக்கிறான்.

மரியாதைக்குரிய

எங்கள் ஆருயிர் அண்ணன் எங்கள் வாழ்கையின் வழிகாட்டி அனுபவத்தில் முதிர்ந்தவர் வெங்கடேஷ்  என்கிற ராசப்பன் என்கிற ராஜண்ணன்அவர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்
புகைப்படங்கள் என் அன்பு மகனுடையது -2

                


    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சதிஸ் குமார் மேட்டுத்தம்பி

 என்னுடை சித்தி பையன் 
மேட்டுப்பாளயத்தில்  இருப்பதனால் செல்லமாக மேட்டுத்தம்பி  
Thursday, July 14, 2011

Sunday, July 10, 2011

கோவையின் பெருமை-1


வாடிய பயிரை  கண்டபோதெல்லாம்  வாடினேன்  என்றார்-வள்ளலார் 

பிணியிலே (நோயிலே) கொடுமையான பிணி எதுவென்றால் பசிப்பிணி தான் என்கிறார் அவர் ,
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxகோவையை நினைத்து பெருமை பட பல விஷயங்கள் இருந்தாலும். நான் பெருமையாக கருதுவது பசிப்பிணி போக்கும் செயலை செய்வோரைத்தான். அதில் குறிப்பிட தகுந்த ஒரு உணவாக நிறுவனம் தான் ஹோட்டல் அன்னலட்சுமி 

தாயாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமம் ஆனைகட்டி - கோவை
உலக வரைபடத்தில் குறிப்பிடுமளவுக்கு கோவை வளர்ந்து விட்டாலும் அதனுள் இருக்கும் அதிசயங்கள் ஏராளம் , அதில் ஒன்று  ...

அது 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நண்பர் ஆனந்த்  வர்ப்புருத்தளினாலே  ஆனைகட்டி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமத்திற்கு செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் நான்கு பேர் இரண்டு டூ வீலரில் கோவை சாய்பாபா காலனியிலிருந்து கிளம்பினோம். காணுவாய் என்ற கிராமத்தை தாண்டி சென்றதும் வனம் நம்முடன் பயணிக்கிறது அடுத்து தடாகம் மாங்கரை என்ற கிராமங்களை தாண்டியவுடன் அதுவரை தெரிந்த ஒரு சில வீடுகளும் மறைகிறது. வழியில் சில செங்கல்

Saturday, July 09, 2011

பஞ்ச கேதார் யாத்திரை!
இமயத்திலுள்ள கேதார்நாத், மத்ய மகேஸ்வர், துங்கநாத், கர்பேஸ்வர், ருத்ரநாத் ஆகிய ஐந்து பெருமைமிக்க சிவஸ்தலங்களை தரிசிப்பதே பஞ்ச கேதார் யாத்திரை எனப்படுகிறது.


மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட கேதார்நாத் வந்தார்கள். பாண்டவர்களைக் கண்ட சிவபெருமான் நந்தியாக உருமாறினார். நந்தி வடிவத்தில் இருந்த சிவபெருமானைப் பாண்டவர்கள் அறிந்து கொண்டார்கள். உடனே நந்தி வடிவத்திலிருந்த சிவபெருமான் தனது கொம்பால் பூமியைப் பிளந்து மறைவதற்கு முயற்சி செய்தார். இதனைக் கண்ட பீமன் நந்தியோடு போராடினான். போராட்டத்தில் நந்தியின் உடலைத் தனித்தனியாகக் கிழித்து எறிந்தான். பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் அங்கங்கள் இமயத்தில் ஐந்து இடங்களில் விழுந்தன. அவையே இந்த ஐந்து ஸ்தலங்கள்.


மந்தாகினி நதிக்கரையோரத்திலுள்ள கௌரி குளத்தின் அருகே பிரம்மாண்டமான கேதார்நாத் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் அந்தக் காலத்து கட்டயூரி (ஃர்ற்ற்ஹஹ்ன்ழ்ண்) வடிவமைப்பில் அமைந்துள்ளது. கோவிலின் கூரைகள் தேக்கு மரங்களால் வேயப்பட்டுள்ளது மிகவும் விசேஷமா னது. கேதார்நாத்தில் நந்தியின் (சிவபெரு மானின்) கழுத்துப் பகுதி விழுந்ததால், கோவிலின் பிரதான சந்நிதியில் நந்தி பகவான் கழுத்து பாகம் வரை மட்டுமே தெரியும் வண்ணம் மிகச் சிறப்பா கக் காட்சி கொடுக்கிறார்.


மத்யமகேஸ்வர் கோவிலில் மக்கள் சிவபெருமானின் வயிற்றுப்பகுதியை வணங்குகிறார்கள். கேதார்நாத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உகிமத் (மந்ண்ம்ஹற்ட்) என்ற இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் 25 கிலோ மீட்டர் தொலைவு சென்றால் குப்தகாசி என்ற இடத்தை அடையலாம். குப்தகாசியிலுள்ள காளிமத் (ஃஹப்ண்ம்ஹற்ட்) என்ற இடத்தில் மத்யமகேஸ்வர் கோவில் அமைந் துள்ளது. கோவில் நுழைவாயிலில் நந்தி பகவான் காட்சி கொடுக்கிறார். அடுத்து சிவபெருமான் பார்வதி தேவியோடு அருள்புரியும் சந்நிதியும் உள்ளது.


உகிமத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில், பத்ரிநாத் செல்லும் வழியில் துங்கநாத் சிவஸ்தலம் உள்ளது. துங்கநாத் கோவிலில் சிவபெருமான் ஒரு அடி உயரத் தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார். இந்தக் கோவிலில் பார்வதி தேவிக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இந்த இடத்தில்தான் ராவணன் சிவபெருமானை நினைத்துத் தவம் செய்தான் என்று ராமாயணம் கூறுகிறது.


நந்தியின் (சிவபெருமானின்) ஜடை மட்டும் கர்பேஸ்வர் கோவிலில் விழுந்ததால், இங்கு சிவபெருமான் ஜடையோடு தரிசனம் கொடுக்கிறார். இங்கு சிவபெருமான் "ஜடாதாரி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். கர்பேஸ்வர் கோவில் "உர்கம்' (ன்ழ்ஞ்ஹம்) என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரதான சந்நிதி யில் கருப்பு நிறத்தில் நந்தி பகவான் தரிசனம் கொடுக்கிறார். மேலும் இந்தக் கோவிலில் அனுமன், விநாயகர் சந்நிதிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


சிவபெருமானின் ஐந்தாவது அங்கமான முகம் மட்டும் ருத்ரநாத் கோவிலில் விழுந்ததால், இங்கே அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி தருகிறார். இந்தக் கோவிலிலும் சுயம்பு


லிங்கம் இடம் பெற்றுள்ளது. இடப்புறத்தில் ஐந்து சிறிய


லிங்கங்கள் உள்ளன. வலப் புறத்தில் சரஸ்வதி தேவி சந்நிதி உள்ளது. இது இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும்.


பஞ்ச கேதார் யாத்திரை கேதார்நாத்திலிருந்து தொடங்கி மத்யமகேஸ்வர், துங்கநாத், கர்பேஸ்வர், ருத்ரநாத் என்று ஐந்து சிவ ஸ்தலங்களைக் கொண்டது. ருத்ரநாத் கோவிலின் அருகே சூர்ய குளம், சந்திர குளம், நட்சத்திரக் குளம் என்று மூன்று விசேஷமான குளங்களில் நீராடலாம். ருத்ரநாத் கோவிலின் அருகே வைதாரிணி என்ற நதியும் ஓடுகிறது. மறைந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்குச் செல்லும்போது இந்த நதியைக் கடந்து செல்வதாகச் சொல்கிறார்கள்.


பஞ்ச கேதார் யாத்திரை மனதிற்கு அமைதி யைக் கொடுத்து, தெளிவான சிந்தனையை வளர்க்கிறது. பாவங்களைப் போக்கி இறை ஞானத்தைக் கூட்டுகிறது. இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட பஞ்ச கேதார் சிவ ஸ்தலங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.