வலையுலக நண்பர்கள்

Sunday, July 24, 2011

முதியோருக்கு இளையோர் தரும் பரிசு ........


பழுத்த இலையை பார்த்து குருத்து இலை பழித்ததாம். அதற்க்கு பழுத்த இலைபதில் சொல்லாது சிரித்ததாம். சில நாட்களில் அந்த குருத்து இலை பழுத்ததாம். இப்போது அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்ததாம்...............

நேற்று:

இடுகையிட்டு ஆறு நாளகிருச்சு, ஏதாவது எழுதலான்ன ஒரு விசயமும் கிடைக்கல, இப்படித்தான் பாருங்க ஏதாவது நம்ம போட்டோசயாவது வெளியிடலான்னு நேத்து ராத்திரி உக்காந்தேன். மனசுக்கு எதுவும் சரிப்பட்டுவரல, சரி followeroda இடுகைய பாத்து கமாண்டாவது கொடுக்கலான்னு, அப்படியே வலை மேய்ந்து கொண்டிருந்தேன்.

சுமார் பதினோரு மணி இருக்கும்.போன் எனது favorit ரிங் டோனான,
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று - கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று -என்று கூவியது... அழைத்தது என் நண்பனின் தங்கை, 
அவர் அண்ணா எங்கண்ணன் எங்கையோ போயிட்டு வரும்போது வண்டி எக்சிடன்ட் ஆயிருச்சாம் அப்பா வேற ஊருல இல்ல, அம்மா ரொம்ப பயப்படறாங்க கொஞ்சம் வாங்க என்றார்,


உடனே கிளம்பி போனேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் போன்பண்ணி சிவக்குமார் ந்க்றவர் வண்டியிலிருந்து விழுந்துட்டதாகவும், நான் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என்றும், ஜி ஹெச் க்கு உடனே கிளம்பி வரும்படி சொன்னதாகவும் சொன்னார். 
நான் போன் வந்த நெம்பரை வாங்கி எனது மொபைலிலிருந்து அந்த எண்ணுக்கு போன் செய்தேன். அவர் சார் பார்டி புல் தண்ணி வண்டி ஓட்ட முடியாம ஒரு மரத்தில மோதி கிழே  கிடந்தார் பாத்தவங்க போன் பண்ணுனாங்க, ஜி ஹெச்சுல அட்மிட் பண்ணிட்டேன். போயி பாருங்க என்று வார்டு நம்பரை சொன்னார். நான் துணைக்கு என் இன்னொரு நண்பரை போன் செய்து வரச்சொல்லி இருவரும் சேர்ந்து ஜிஹெச்சுக்கு போனோம், அங்கு நண்பரை பார்த்து அவருக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு,  அவங்க தாயாருக்கு போன் செய்து ஒன்றும் பயப்பட வேண்டாம், சாதாரண காயம் தான் என்றும், காலையில் அவருக்கு தேவையான சில பொருட்களை எடுத்து வரும் படியும்,
காலை வரை நாங்கள் இருப்பதாகவும் சொல்லி போனை கட் செய்தேன்.

அப்போது அந்த வார்டு காப்பாளரிடம் ஒரு முதியவர் பேசிகொண்டிருந்தார், நமக்கு தான் நேரம் போகாது அதோடு பிலாக்கில் எழுத விசயமும் வேண்டுமே காதை கொஞ்சம் அவர் பக்கமாக போகஸ் செய்தேன். 

அவர் பேசியதை வைத்து அட நமக்கு இடுகை கிடைத்து விட்டது, என முடிவு செய்து சற்று நேரத்தில் அவரை நமது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தோம்.

இப்போது அவர் பேசுகிறார் கேளுங்கள் 
தம்பி என் பேரு ராமசாமி, எனக்கு வயது 79 , எங்க முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு அம்மாள் தவறி கீழே  விழுந்து விட்டார், அவர இங்க அட்மிட் பண்ணி 4  நாளாச்சு. அந்தம்மாவுக்கு ரெண்டு பொண்ணுங்க, அவங்க கவனிக்க முடியலன்னு நா இருக்கற ஹோம்ல கொண்டு வந்து விட்டுட்டாங்க, இப்ப நாங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து பாத்துக்கறோம் என்றார்,
எ ஊரு மேட்டுப்பாளையம் பக்கத்தில ஆலங்கொம்பு , நான் ஒரு நெசவாளி தம்பி,  எ சம்சாரம் போயி 16 வருசமாச்சு, எனக்கு நாலு பசங்க, எல்லாம் நல்ல வசதியாத்தான் இருக்காங்க, ஆனா என்ன பாக்க முடியாதுன்னு தொரத்தி விட்டுட்டாங்க, ஊர்ல இருக்கறவங்க சொல்லியும் கேக்க மாட்டேன்னுட்டங்க,அப்பறம் ஊரில் உள்ள சிலர் என்னை விஸ்வநாத் செட்டியார் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர், கடந்த அஞ்சு வருசமா அங்க தான் இருக்கேன், எங்கள் இல்ல மதிய சாப்பாட்டு செலவுக்கு 1200 /- ரூபாய் ஆகிறது , காலை அல்லது மாலை டிபன் செலவு 900 /- ரூபாய் ஆகுது 
மாதத்தில் 15 நாள்  யாராவது இந்த செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
மற்ற நாளில் எங்கள் இல்ல காப்பாளர் பார்த்துக்கொள்கிறார். என்றார் மேலும் ஒரு இரண்டு மணி நேரம் அவரது சொந்த விசயங்களை பற்றி சொன்னார். 
அவரிடம் இல்ல விலாசத்தையும், போன் நம்பரையும் வாங்கிக்கொண்டேன்.
விலாசம்:      விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லம்
அன்னூர்ரோடு, ஜடையம்பாளையம் கிராமம், மேட்டுப்பாளையம்,
போன்:04254 -320792, இல்ல நிர்வாகியின் செல் :8940991805 ,

இன்று.......

வலை நோக்கர்களே,பதிவர்களே இந்த பதிவை படிப்பதோடு நில்லாமல் உங்களால் இயன்றதையோ அல்லது இயன்றவர்களிடமோ இதை சொன்னால் போதும் அவர்களின் ஒரு நேர உணவுக்கு நாம் உறுதியளிப்போம்,

இந்த விசயத்தில் மூன்று விதமான கருத்துக்கள் தோன்றுகிறது

குழலினிது யாழினிது தம் மக்கள் மழழை சொல் கேளாதவர்  என்ற வள்ளுவர் 
மக்கட்பேறு எனும் அதிகாரத்தோடு முதுமை எனும் அதிகாரத்தையும் எழுதி இருக்கலாமோன்னு 

கட்டுரையின் முதலில் சொன்ன பழமொழியை ஏன் எல்லோரும் உணரவில்லை என்று 

இன்று இவர்கள் செய்ததை பார்க்கும் இவர்களின் குழந்தைகள், நாளை இவர்களுக்கு இதையே செய்தால்.........

நாளை: 

முதியவர்கள் வயதால் மட்டுமல்ல.. அறிவாலும் அனுபவத்தாலும் நமக்கு மேலானவர்கள் என்பதை உணர்வோம், உணர்த்துவோம்.

சொல்ல மறந்துட்டேன் அந்த நண்பருக்கு காலை 5 மணியளவில் எல்லாம் இறங்கி சுய நினைவு வந்ததும் அவர் கேட்ட கேள்வி, நான் எப்படி இங்க வந்தேன் என்று ...............

தவறாம கருத்து சொல்லுங்க நான் வளர..........

45 comments:

மாய உலகம் said...

//பழுத்த இலையை பார்த்து குருத்து இலை பழித்ததாம். அதற்க்கு பழுத்த இலைபதில் சொல்லாது சிரித்ததாம். சில நாட்களில் அந்த குருத்து இலை பழுத்ததாம்.//

உவமை.... உபயோகமான உதவும் பதிவு... நன்றியுடன் வாழ்த்துக்கள்...

Riyas said...

//முதியவர்கள் வயதால் மட்டுமல்ல.. அறிவாலும் அனுபவத்தாலும் நமக்கு மேலானவர்கள் என்பதை உணர்வோம், உணர்த்துவோம்//

உண்மை நல்ல பதிவு

DrPKandaswamyPhD said...

நல்ல அனுபவம்.

பின்னூட்டங்களில் எழுத்துகளின் கலர் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது.

தலைப்பு போடவில்லை போல இருக்கிறது. பதிவை போஸ்ட் செய்யும்போது தலைப்பையும் போடுங்கள்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

DrPKandaswamyPhD said...
தலைப்பு போடவில்லை போல இருக்கிறது. பதிவை போஸ்ட் செய்யும்போது தலைப்பையும் போடுங்கள்.

சரி செய்து விட்டேன். தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி .சார் !

! ஸ்பார்க் கார்த்தி @ said...

மாய உலகம் said...
உவமை.... உபயோகமான உதவும் பதிவு... நன்றியுடன் வாழ்த்துக்கள்...

நன்றி நண்பரே!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

Riyas said...
//முதியவர்கள் வயதால் மட்டுமல்ல.. அறிவாலும் அனுபவத்தாலும் நமக்கு மேலானவர்கள் என்பதை உணர்வோம், உணர்த்துவோம்//

உண்மை நல்ல பதிவு

நன்றி நண்பரே,தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

சென்னை பித்தன் said...

சென்னயில் சில இல்லங்களுக்குச் சென்றிருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக் கதை.கேட்டு மனம் நொந்திருக்கிறேன்.நம்மால் இயன்றதைச் செய்யலாம்.
நல்ல பதிவு.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

சென்னை பித்தன் said... நல்ல மனம் வாழ்க ! சார்! நன்றி.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வலை நோக்கர்களே,பதிவர்களே இந்த பதிவை படிப்பதோடு நில்லாமல் உங்களால் இயன்றதையோ அல்லது இயன்றவர்களிடமோ இதை சொன்னால் போதும் அவர்களின் ஒரு நேர உணவுக்கு நாம் உறுதியளிப்போம்,

ஆகா.. அருமையான உள்ளம் கார்த்தி
உங்களுக்கு..

நிச்சயம் நம்மால் இயன்ற உதவியை செய்வோம்.. அடியவனும் எமது பங்களிப்பை சந்தர்ப்பம் வரும்போது அங்கு செய்துவிடுகிறேன்.

உயர்ந்த உள்ளம் உங்களுக்கு..
வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

! ஸ்பார்க் கார்த்தி @ said...

சிவ.சி.மா. ஜானகிராமன்
தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி,

karurkirukkan said...

gud work boss
keep it up

! ஸ்பார்க் கார்த்தி @ said...

karurkirukkan

கருத்துரைக்கு நன்றி பாஸ், தொடர்ந்து வருக!!!!

Vijay @ இணையத் தமிழன் said...

உங்கள் பதிவுகள் அருமை.
எனது பதிவில் உங்கள் கருத்துரயிட்டதர்க்கு மிக்க நன்றி , ஸ்பார்க் கார்த்தி !!!

இவண்
இணையத்தமிழன்

மைந்தன் சிவா said...

கருத்துள்ள பதிவு!!!தொடர்வோம்!

M.R said...

இன்று இவர்கள் செய்ததை பார்க்கும் இவர்களின் குழந்தைகள், நாளை இவர்களுக்கு இதையே செய்தால்.........


கண்டிப்பாக நடக்கும் நண்பரே

! ஸ்பார்க் கார்த்தி @ said...

M.R அவர்களே உங்கள் கருத்துரைக்கு நன்றி , தொடரட்டும் உங்கள் வரவு!!!!!!!!!!

RAMVI said...

நல்ல பகிர்வு கார்த்தி.முதியோர்களை இப்படி கொண்டு போய் விடுபவர்கள் தாங்களும் ஒருநாள் முதியோர் ஆகவிடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

vidivelli said...

பெற்றோர் வளர்த்து ஆளாக்கிவிட பிறகென்ன தங்கள் பாட்டிலே ஒன்றைக்கைப்பிடித்து அவர்களை உதறிவிட்டு போடுவாங்க...
இதைத்தான் அவர்கள் பிள்ளையும் செய்யும் என்று அப்போது நினைப்பதில்லை..
இப்படியான சம்பவங்கள் மலிந்து விட்டது சகோ...
நல்ல பதிவு,,
வாழ்த்துக்கள்..

எனது பக்கம்.
sempakam.blogspot.com

M.R said...

இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டு சம்பந்தமான நகைச்சுவை .

வாருங்கள், படியுங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள் .
நன்றி

! ஸ்பார்க் கார்த்தி @ said...

M.R

படித்தேன், ரசித்தேன், தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!!!!!!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

vidivelli


சரியாக சொன்னீர்கள், சகோ!!!!!!!!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

RAMVI அவர்களே!!!!
தங்கள் பதிவுக்கு நன்றி!!!!!!!!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

மைந்தன் சிவா நன்றி!!!!!!!!

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

மனோ சாமிநாதன் said...

ஒரு அருமையான, ஆக்கப்பூர்வமான பதிவெழுதியதற்கு இனிய வாழ்த்துக்கள்! உங்களை மாதிரி ஒரு இளைஞர் மிகப்பொறுப்பாக எழுதியிருப்பதைப்பார்க்கும்போது மனம் மகிழ்கிறது! முதியோர் இல்லங்களுக்கு அடிக்கடி சாப்பாடு தருவதுண்டு. நம்மை வாழ்த்தும் அந்த முதியோரின் கண்களில் தென்படும் வலி மனதைத் துயரமடையச் செய்யும் எப்போதும். பொருள், உண‌வு, உடை கிடைக்கும் திருப்தியையும் மீறி அவர்களின் இரத்த பந்தங்களின் பிரிவு அவர்களை எப்போதும் சோகத்திலேயே வைக்கிறது! அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கனிவும் கருணையும் அன்பும்தான்!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

மனோ சாமிநாதன்

தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள், அன்புடன் ஸ்பார்க் கார்த்தி

kalai said...

nalla padhivu

Anonymous said...

indha maadhiri solla , aal illai.

ஈரோடு தங்கதுரை said...

நண்பரே நல்லதொரு பதிவு. தொடர்ந்து நெறைய எழுதுங்கள் ...!

மாலதி said...

//முதியவர்கள் வயதால் மட்டுமல்ல.. அறிவாலும் அனுபவத்தாலும் நமக்கு மேலானவர்கள் என்பதை உணர்வோம், உணர்த்துவோம்//

உண்மை நல்ல பதிவு

! ஸ்பார்க் கார்த்தி @ said...

ஈரோடு தங்கதுரை said...
நண்பரே நல்லதொரு பதிவு. தொடர்ந்து

நன்றி தங்கதுரை

! ஸ்பார்க் கார்த்தி @ said...

மாலதி said...

நன்றி மலதிம்மா

எஸ் சக்திவேல் said...

>எனக்கு நாலு பசங்க, எல்லாம் நல்ல வசதியாத்தான் இருக்காங்க, ஆனா என்ன பாக்க முடியாதுன்னு தொரத்தி விட்டுட்டாங்க, ..

மனம் கனக்கிறது. துரத்தியவர்களுக்கு இதுமாதிரி ஒரு நிலைமை வரலாம், வராமலும் போகலாம். ஆனால் இந்த முதியவரின் துன்பத்திற்கு யார் காரணம்?

! ஸ்பார்க் கார்த்தி @ said...

எஸ் சக்திவேல் said...
ரொம்ப நன்றி! நண்பா!!!!

S.Gnanasekar said...

நல்ல பதிவு நன்பர் ! ஸ்பார்க் கார்த்தி @ அர்களே, எல்லோருக்கும் முதுமை வரும் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்...

Anonymous said...

அந்த இல்லத்திற்கு நிதி உதவி கிடைக்க என்னாலான முயற்சிகளை எடுக்கிறேன்... பகிர்வுக்கு நன்றி.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

Heart Rider said...
அந்த இல்லத்திற்கு நிதி உதவி கிடைக்க என்னாலான முயற்சிகளை எடுக்கிறேன்... பகிர்வுக்கு நன்றி
///நன்றி நண்பரே!!!!!!

Ramani said...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் முதலில் நன்றி
நல்ல பயனுள்ள பதிவாகக் கொடுத்திருக்கிறீர்கள்வாழ்த்துக்கள்
தொடர்ந்து வருகிறேன்
இப்படி பயனுள்ள நல்ல பதிவாகத் தொடர வாழ்த்துக்கள்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

Ramani said...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் முதலில் நன்றி
நல்ல பயனுள்ள பதிவாகக் கொடுத்திருக்கிறீர்கள்வாழ்த்துக்கள்
தொடர்ந்து வருகிறேன்
இப்படி பயனுள்ள நல்ல பதிவாகத் தொடர வாழ்த்துக்கள்


////////தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்!!!!/////

பத்மநாபன் said...

நல்ல பதிவு ஸ்பார்க் கார்த்தி... நாட்டுக்கு வரும் பொழுது அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொள்கிறேன். நன்றி....

! ஸ்பார்க் கார்த்தி @ said...

//பத்மநாபன் said...
நல்ல பதிவு ஸ்பார்க் கார்த்தி... நாட்டுக்கு வரும் பொழுது அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொள்கிறேன். நன்றி../////

கண்ணடிப்பா, நம்மள போல் உள்ளோர் உதவியில்தான் அவர்கள் கண்ணீர் ஆறும்,

ஆகுலன் said...

நானும் வந்துடன்..................

! ஸ்பார்க் கார்த்தி @ said...

ஆகுலன் said...
நானும் வந்துடன்..................

வாங்க ஆகுலன்

இராஜராஜேஸ்வரி said...

பழுத்த இலையை பார்த்து குருத்து இலை பழித்ததாம். அதற்க்கு பழுத்த இலைபதில் சொல்லாது சிரித்ததாம். சில நாட்களில் அந்த குருத்து இலை பழுத்ததாம். இப்போது அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்ததாம்............../

அருமையான வாழ்வியல் தத்துவம் தந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.