வலையுலக நண்பர்கள்

Friday, July 15, 2011

தாய் பா(சத்தின்)லின் கடன்                          

 மத்தியான வெய்யில் சுருக்கென்று அடித்தது யோசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் கௌதமன், என்ன செய்வது பட்டகஷ்டத்திர்கெல்லாம்
   பலனே இல்லையே நமது விதி இதிதானா நினைவுகள் இப்படி போய்கொண்டிருக்க,  கௌதமனைபற்றிய சுருக்கம் வீட்டில் ஒரேபையன் அவன் அப்பா ஏதோ ஒரு விபத்தில் இவன் பிறந்து சில மாதங்களிலேயே  போய்சேர்ந்து விட்டார், இவன் தாயார் படாத பாடெல்லாம் பட்டு இவனை ஒரு டிகிரி வரை படிக்க வைத்து விட்டால், அவளால் முடிந்தது அவ்வளவுதான், அதற்கே அவள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமல்ல, தன்னந்தனியாக ஒரு பெண்ணால் எவ்வளவு கஷ்டபடமுடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு விட்டால், கௌதமனும் அவன் தாயின் நிலையை நினைத்து சிறு வயது முதலே கவனமாக படித்து இன்று எம்.ஏ வரை படித்து விட்டன். படித்து என்ன செய்வது சரியான வேலை அமையவில்லையே, ஏறாத கம்பனியில்லை, கேட்காத ஆள் இல்லை ம்ம்ஹூம் ....ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. சரி வேருஎதவது  செய்யலாமென்று சிலநாள் கூலி வேலைக்கு கூடசென்றான் அனால் அதில் வந்த வருமானம் அவன் தாயின் மருத்துவ செலவுக்கு கூட போதவில்லை. இதுவரை எந்த ஒரு சுகத்தையும் பாராமல் தன் மகனின் எதிர்கலத்திர்க்காக பாடுபட்ட அந்த தாயின் வாழ்க்கை இப்போது முடியும் தருவாயில் உள்ளது கடைசியாக இன்று காலை அவர்களுக்காக மனமிரங்கிய ஒரு டாக்டர் வந்து பார்த்துவிட்டு கௌதமா உன் அம்மாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது ,
எப்படியாவது இந்த மருந்தை வாங்கி வந்து விடு எனக்கூறி ஒரு மருந்து சீட்டில் சில மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு மாலை வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றார். இருந்த பணத்தையும் டாக்டருக்கு கொடுத்தாகி விட்டது . இனிமருந்து வாங்க என்ன செய்வது என புரியாம அவர்கள் தங்கி இருந்த குடிசையிலிருந்து நடந்தே பல தூரம் வந்து விட்டான். இப்போது பல யோசனையோடு  நடந்து சென்று கொண்டிருக்கிறான்.

மீண்டும் கௌதமனிடம் வருவோம். மனதிற்குள் பல யோசனையோடு சென்ற  கௌதமனின் கண்ணில் அந்த போர்டு கண்ணில் பட்டது அது ரத்த வங்கியின் பெயர் பலகை உடனே ஒரு எண்ணம் விருட்டென நடந்து, அந்த ரத்த வங்கிக்குள் நுழைந்தான், உள்ளே நல்ல தடித்த உடல்வாகுடைய  ஒருவர் அப்போதுதான் சாப்பிட்டு முடித்த களைப்பில் அமர்ந்திருந்தார்,சார் நான் ரத்தம் கொடுக்கலாம்னு இருக்கேன் என்றான் கௌதமன். அதற்க்கு அவர் அதற்கென்ன கொடுக்கலாம் உன் ரத்தம் என்ன குரூப் என்றார், இவன் தன் ரத்த குரூப்பை சொன்னான் ,  அவர் அடடே தம்பி இந்த குரூப் ரத்தமில்லமதான் ஒருவர் ரொம்பநேரம அலமோதறார் சீக்கிரம் வா என சொலிவிட்டு வரண்டாவில் அமர்ந்திருந்த ஒருவரை அழைத்து பேசினார், அவர் கௌதமனிடம் நெருங்கிவந்து சார் கடவுள் போல வந்திருக்கீங்க, என் மகனுக்காக நான் ரொம்பநேரமா இந்த ரத்தம் கெடைக்காம தான் அலையறேன் என்றார். அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்தது, ரத்தம் கொடுத்து விட்டு வந்த கௌதமனை பார்த்து அந்த நபர், சார் உங்க உதவிய மறக்கவே மாட்டேன், உங்களுக்கு எதாவது செய்யவேண்டும், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்டார். மிக தயங்கியபடி "சார் ஒரு ஆயியம் ரூபாய் கிடைக்குமா என கேட்டான்" உடனே அவர் சார் இந்தாங்க என கூறியபடி தன் சட்டையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டினார், அதை வங்கி கொண்டு அவசரமாக ஓடி ஒரு மருந்து கடையில் தன் தாயாருக்கு தேவையான் மருந்துகளை வாங்கிகொண்டு வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினான் கௌதமன்,தன் வீட்டை நெருங்கும் போதே வீட்டின் முன் சிலர் கூட்டமாக நிர்ப்பது தெரிந்தது, இவன் முகத்தை பார்த்ததும் சிளார் அழுதுகொண்டே ஓடு வந்தனர், கௌதமனுக்கு புரிந்து விட்டது, வாங்கி வந்த மருந்தை கீழே போட்டு விட்டு ஓடினான் வீட்டை நோக்கி, அவன் வீட்டினில் நுழைந்த போது அங்கே அவன் தாய் பேச்சு மூச்சில்லாமல் படுக்க வைக்கப்பட்டிருந்தால் , நிலை குலைந்து போய் அவன் அருகில் உட்கார்ந்தான் கௌதமன், அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல்,  உயிர் இழுத்துட்டு இருக்கு யாராவது பால் உத்துங்கப்பா என்றது, இவன் சட்டைப்பையில் மருந்து வாங்கியது போக மீதமிருந்த பணத்தை அருகிலிருந்தவர்கள் எடுத்து யாரோ ஒருவரிடம் கொடுக்க, அந்த பணம் பாலாக மாறி இவன் கைகளுக்கு வர. பக்கத்திலிருந்தவர்கள் இவன் கையில் அந்த பாலைகொடுத்து அவன் தாயின் வாயில் ஊற்றினர். தன் ரத்தத்தை பாலக மாற்றி தனக்கு கொடுத்த தாயிற்கு தன் ரத்தத்தை விற்று  வாங்கிய காசில் பாலுற்றி தன்னை பெற்ற கடனை அடைத்தான் கௌதமன்.

                                  முற்றும். 
பின்குறிப்பு :ஆறு வருடங்களுக்கு முன்பு நான் யோசித்து எழுதிவைத்த இந்த கதை இப்போது என் வலைப்பூவில் முதன் முதலில் பிரசுரமாகியுள்ளது, என் முதல் பிரசுரத்தில் ஏதேனும் பிழைகளிருந்தால் மன்னித்து அதை எனக்கு சுட்டிக்காட்டவும் 

மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர 

14 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் நண்பரே,

www.sparkkarthi.blogspot.com என்னும்
தங்களுடைய பழைய வலைதளத்திற்கு செல்ல ஒவ்வொரு நாளும் முயற்சிப்பேன் .. அவ்வகையில் இன்று வந்திதில் இன்று தான் லிங்க் ஓபன் ஆகி புதிய முகவரி கிடைத்தது.

இத்தளத்தில் தாங்கள் அனைத்து வசதிகளையும் நிறுவி விட்டீர்கள் - மகிழ்ச்சி

எமது வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நன்றி நண்பரே...

நான் இனி படிக்க வேண்டிய வலைத்தளப் பட்டியலில்
சிவயசிவ - வையும் இணைத்திருப்பமைக்கு.

மிக்க நன்றி..

கார்த்தி-ஸ்பார்க் said...

வந்தேன், கண்டேன், மகிழ்ந்தேன், இடுகைகள் அருமை ஆனால் பாரத தேசம் தென்திசையிளிருப்பதாக தங்கள் கூறியுள்ளதுதான் சற்று நெருடலாக உள்ளது, மன்னிக்கவும் வரைபடத்தை சற்று முழுமையாக பார்க்கவும். "நான் இனி படிக்க வேண்டிய வலைத்தளப் பட்டியலில்
சிவயசிவ - வையும் இணைத்திருப்பமைக்கு." அது நான் இனிக்க படிக்க வேண்டியவை அல்ல. நா (நாக்கு) இனிக்க
தொடர்ந்து வருவேன் இடுகையை படிக்க மட்டுமல்ல, விமர்சிக்க்கவும்தான்

மாய உலகம் said...

தன் ரத்தத்தை பாலக மாற்றி தனக்கு கொடுத்த தாயிற்கு தன் ரத்தத்தை விற்று வாங்கிய காசில் பாலுற்றி தன்னை பெற்ற கடனை அடைத்தான்

கதையும்,கதையின் கருவும் நல்லாருக்கு..வாழ்த்துக்கள் நண்பரே....

RAMVI said...

ரத்தத்தினை பாலாக்கி கொடுத்த தாய்க்கு அவன் தன் ரத்தத்தை கொடுத்து கடனை அடைத்தது..... மிகவும் அருமையான கதை.
என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு நன்றி கார்த்தி.
நீங்க பயண கட்டுரைகள் பற்றி கேட்டீர்கள் அல்லவா?
துளசி மேடம், இராஜராஜேஸ்வரி மேடம் போன்றவர்கள் அழகான பயண கட்டுரைகள் எழுதுகிறார்கள், நீங்க் அவர்களுடைய பதிவுகளை பின் தொடர்ந்தால் நல்ல தகவல்கள் கிடைக்கும்..

கார்த்தி-ஸ்பார்க் said...

தங்களின் பின்னுட்டத்திற்கு நன்றி, மாய உலகத்தின் நண்பரே தொடர்ந்து வருகிறேன் உங்களை

கார்த்தி-ஸ்பார்க் said...

துளசி மேடம், இராஜராஜேஸ்வரி மேடம் ஆகியோரது பிளாக் அட்ரெஸ் கொடுங்களேன் சகோதரி

தமிழ்வாசி - Prakash said...

அருமையான கதை நண்பரே... தொடருங்கள்.

கார்த்தி-ஸ்பார்க் said...
This comment has been removed by the author.
கார்த்தி-ஸ்பார்க் said...

அன்பு நண்பர் தமிழ் வாசி அவர்களே. தங்களின் வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

Rathnavel said...

நல்ல கதை. எழுத்து நடை நன்றாக இருக்கிறது. எழுத்துப் பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள். மற்ற நல்ல பதிவுகளை நிறைய படியுங்கள். மற்ற புத்தகங்களை நிறைய படியுங்கள். குறைய எழுதினாலும் நல்ல பதிவுகளாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

கார்த்தி-ஸ்பார்க் said...

தங்களின் பின்னுட்டத்திற்கு நன்றி, ஸ்ரீ வில்லிபுத்தூராரே

karurkirukkan said...

boss
really super touching story

congrats...

கார்த்தி-ஸ்பார்க் said...

thank you my dear friend கரூர்கிருக்கனாரே