வலையுலக நண்பர்கள்

Monday, November 07, 2011

வான் சிறப்பு-002


11,  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்12, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

13, விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

 மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்


14, ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

15,கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்     
                                                                          
                                                                           றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

 பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்


16, விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

 வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது17,நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

 மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்18,சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது19,தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

 மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.20,நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை மறக்காமல்  பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும்  படிக்க லிங்க் அனுப்புங்கள்.  திரட்டிகளிலும் சேர்த்திடுங்கள், மறக்காம . Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  எனது  பதிவு உங்கள் Dash Board க்கு வந்து சேரும்,   உங்களது Email id ஐ வலப்புறம் உள்ள கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து சேரும்

அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைனை  சேர்த்தி உள்ளேன் , எனது டிசைன் பற்றி 

மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,

37 comments:

கோகுல் said...

சரியான நேரத்துல போட்டிருக்கீங்க!

ஆனா மழை கொஞ்சம் அதிமாவே

சிறப்பித்துக்கொண்டிருக்கிறது!

வான்சிறப்பை சுட்டும் உங்களது கை வண்ணம் நல்லாருக்கு!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி கோகுல்,,,, இன்று காலையிலிருந்து திருப்பூரில்தான் இருந்தேன் , எனது அம்மா, பெரியாப்பவின் வீட்டில் உள்ளோரெல்லாம் மழை சேதத்திலிருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர், ஆனால் அவர்களின் உடைமைகள் வீடு, போன்ற வற்றை இழந்துள்ளனர், நேரில் பார்த்தபோது கண்களே கலங்கி விட்டது, இப்போதுதான் வந்து சேர்ந்தேன்,

suryajeeva said...

தொடருங்கள்... அருமையான முயற்சி

! ஸ்பார்க் கார்த்தி @ said...

suryajeeva said...
தொடருங்கள்... அருமையான முயற்சி

நன்றி நண்பரே!!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் வான் சிறப்பு எழுதிய நேரம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது!
அருமையான முயற்சி. தொடருங்கள்!
அதே சமயம் உங்கள் உற‌வுகள் இந்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டதை நினைத்தால் மிகவும் வ‌ருத்தமாக இருக்கிறது!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

மனோ சாமிநாதன்
தங்கள் நல மனத்துக்கு என் அநேக நன்றிகள், தொடருங்கள்....

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பா வான்மழையாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Philosophy Prabhakaran said...

ஆஹா... திருவள்ளுவர் கிட்ட இருந்தே காப்பி பேஸ்ட்டா... நல்லா வருவீங்க தம்பி...

காட்டான் said...

வணக்கம் கார்த்தி
அருமையாய் இருக்கின்றது உங்கள் பதிவு வாழ்த்துக்கள்..

DrPKandaswamyPhD said...

நல்ல முயற்சி.

Ramani said...

நல்ல முயற்சி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

விச்சு said...

அருமை நண்பா!முயற்சி தொடர வாழ்த்துக்கள்.த.ம 3

நிகழ்காலத்தில்... said...

திருக்குறள் அதிகாரத்திற்குப் பொருத்தமான புகைப்படங்கள், நல்ல தொரு முயற்சி தொடருங்கள் கார்த்தி....

வாழ்த்துகள்., திருப்பூர் நேற்றய வெள்ள பாதிப்பு அதிகம்தான்.,

ரமேஷ் வெங்கடபதி said...

பாராட்டுகள் மழையாக பொழியட்டும்! மழையை திட்டுவோருக்கு நல்லதொரு விளக்கம்,வள்ளுவரின் எழுத்து மூலமாக!

Lakshmi said...

இன்னிக்குத்தான் உங்கபக்கம் வரேன். பதிவு ரொம்ப நல்லா இருக்கு ஃபாலோவராக இணைந்துவிட்டேன்.

RAMVI said...

அருமை கார்த்தி,தொடர்ந்து எழுதுங்கள்.படித்து பயன் பெறுகிறோம்.

தமிழ்வாசி - Prakash said...

நல்ல முயற்சி... தொடருங்கள் ஸ்பார்க்.

Mohamed Ali Blog said...

அன்பிற்கினிய நண்பர் ஸ்பார்க் காந்தி அவர்களுக்கு அன்புடன் A.S. முஹம்மது அலி எழுதும் மின் மடல் நலம். நலமறிய ஆவல் நிற்க! இன்று தங்களின் வலைப்பூவை பார்த்தேன். மனித குலம் வாழ நீர் இன்றி அமையாது உலகு என்கிற முது மொழியை நினைவு கூர்ந்து தாங்கள் வழங்கியுள்ள கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது. தொடரட்டும் இப்பணி. நல்வாழ்த்துக்களுடன் அன்புடன் A.S.முஹம்மது அலி

ராஜா MVS said...

தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்... நண்பா...

மாலதி said...

சிறப்பான இடுகைகள் உளம் நிறைந்த பாராட்டுகள்

கவிப்ரியன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

Philosophy Prabhakaran said...

கோபமும் இல்லை... பாராட்டும் இல்லை... சும்மா நக்கல்ஸ்...

Anonymous said...

ஸ்பார்க் கார்த்தி மிக நல்ல முயற்சி. தொடரவும் அருமை. மின்னஞ்சல் போடுவதை விடுத்து எனது வலைக்கு வரவும்.உடனே நானும் எமது பெயரை கிளிக் செய்து வரலாம் அல்லவா! வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

! ஸ்பார்க் கார்த்தி @ said...

என்னை பாராட்டி கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!!!!

Rathnavel said...

நல்ல பதிவு.

சீனுவாசன்.கு said...

மழையா பொழிஞ்சுப்புட்டீக!

புலவர் சா இராமாநுசம் said...

வான்மழை பற்றிய
வள்ளுவர் வாக்கினை
தேன்சுவை கிட்ட
தெரிவித்தீர் நன்றி!

த ம ஓ 7

புலவர் சாஇராமாநுசம்

S.Gnanasekar said...

வள்ளுவரின் வான்சிறப்பு அதிகாரத்தை தக்கசமயத்தில் பதிவு செய்துள்ளிர்கள், நல்ல முயற்சி இது தொடர என் வாழ்த்துக்கள் !ஸ்பார்க் கார்த்தி.

Anonymous said...

தொடருங்கள்... அருமையான முயற்சி...

karurkirukkan said...

gud work karthi

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

பரமசிவம் said...

தமிழர்கள் மறந்துவிட்ட திருக்குறளை நினைவுபடுத்தும் வகையில் விளக்கங்களுடன் வெளீயிட்டுள்ளீர்கள்.
பாராட்டுகள்.
தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

எஸ் சக்திவேல் said...

Write more pls :-)

Rishvan said...

தொடருங்கள்... அருமையான முயற்சி.....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
www.rishvan.com

Latest Tamil Cinema News said...

Congratz...Tamil Cinema News

S Murugan said...

தொடரட்டும் உங்கள் தமிழ்பணி!

Bala subramanian said...


தொடரட்டும் வாழ்த்துகள்

தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!
http://vitrustu.blogspot.in/2013/04/blog-post_4672.html