வலையுலக நண்பர்கள்

Sunday, December 02, 2012

ஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்

அன்பிற்கினிய வலையுலக அன்பர்களுக்கு வணக்கம் வெகு நாட்கள் இடைவெளிக்கு பிறகு உருப்படியான நல்லதொரு தொடர் பதிவை ஆரம்பிப்பதன் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
   
இந்தி மேல் ஆர்வமுள்ளோர் இந்த பதிவு  மூலம் படித்து பயன் பெற அன்புடன் அழைக்கிறேன்,,,,,,


  • ஹிந்தி பழகலாம் வாங்க
ஏன் ஹிந்தி?


  • கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள  கேதார்நாத்  பத்ரிநாத். ரிஷிகேஷ் ஹரித்வார் போன்ற புனித தலங்களுக்கு யத்திரை மேற்கொண்டபோது நாங்கள் எதிர் கெண்ட அனுபவமே இந்த பதிவிற்கு காரணம், எங்களுக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் ஏற்படாமலிருக்க இது ஒரு பாடம் நானும் எனது நண்பர்கள் 3 பேரும் தனிப்பட்ட முறையில் சுற்றுலா சென்றோம், அங்கு மொழி தெரியாமல் நாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பல,,
  • ஹரித்வார் வரை சென்றுவிட்டு மேற்கொண்டு செல்லமுடியாமல் நின்றபோது
  • அங்கு வந்த த நா அரசு அலுவலர் குழுவொன்றை கண்டோம், அவர்களை அணஉகி எங்கள் சிரமத்தை பற்றி சொன்னொம், அதற்கு அவர்கள் துறை ரீதியாக வந்துள்ளதாகவும், எங்களை அழைத்து செல்ல முடியாது எனவும்
  • மேலும் அந்த குழவிலுள்ள ஒரு சகோதரி அச்சச்சோ உங்களுக்கு இந்தி தெரியாதா  நீங்க கோவிலுக்கு போன மாதிரிதான் என்றும் கூறினார்,  • அவர்களின் பெருந்தன்மையை ? நினைத்து விட்டு, பிறகு அங்கு உள்ள கோவிலூர் மடத்திலுள்ள பயன ஏற்பாட்டாளர் திரு அசோக் (கொஞ்கம் தழி தெரிந்தவர்) (நன்றி திரு அசோக்) அவர்களின் உதவியாலும் அந்த திருக்கேதாரீஸ்வரரின் அருளினாலும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தமிழ் தெரியாத ஒரு ஓட்டுனரின் துணையுடன் யாத்திரையை நிறைவு செய்தோம், சுமார் 15 தினங்களில் எங்களுக்கு இந்தி கற்பதற்கு ஒரு வெறியே வந்துவிட்டது, டெல்லியில் வைத்து நாங்கள் 4 பேரும் ஊருக்கு வந்தவுடன் இந்தி கற்பதற்க்கு உறுதியேற்றோம்,
  • அந்த 4 பேரில் பணியின் காரணமாக மூவர் பாதியில் இந்தியை விட்டு விட நான் ஒருவன் மட்டும் தனியாத காதலோடு (ஹிந்தியின் மேல்) முறையாக எழுத, படிக்க, பேச கற்றுக்கோண்டேன்,இதற்காக 2 வருடக்ளாக சுமார் 16,000 ரு செலவலித்துள்ளேன், பல தளங்களில் இந்தி வகுப்புகள் 2 அல்லது 3 தொகுதியுடன் நின்று விடுகிறது, புத்தகங்களோ அதற்க்கு மேல் புரியும்படி சொல்வதில்லை, பிழைகளும் நிறைய இருக்கிறது, இந்த மாதிரியான சூழலில் எனக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது தான் கண்ணதாசன் பதிப்பகத்தாரின் 

  • ஹிந்தி பேசுவோம் என்ற புத்தகம் மற்றும் வேங்கை டிஜிட்டலின் DVD. அதில் கற்ற பாடங்களையும் ஹிந்தி கோர்சில் கற்றதையும் தொகுத்து (காப்பியடித்து அல்ல) சுலபமாக புரியக்கூடிய தொகுதிகளாக தர நினைக்கிறேன், ஊக்கமும், விமர்சனமும் என்னை மேலும் உந்தி தள்ள வேண்டும் இப்பணிக்கு


                                     ஓம் நமச்சிவாய 


இந்தியா    பல மொழிகளை கொண்ட ஒரு நாடு பல மொழிகளிருப்பினும் தொடர்பு மொழி யாக இருப்பது ஹிந்தியும், ஆங்கிலமுமே, தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது,  தொழில் நிமித்தமாகவோ, புனித பயணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ தமிழகத்தை விட்டு  நாம் வெளியே செல்லும் போது நமக்கு ஹிந்தி கட்டாயம் தேவை, என்னதான் ஆங்கில அறிவிருந்தாலும்  டீ கடையிலோ, ஹோட்டலிலோ, பஸ்ஸிலோ, வழி கேட்கவோ நமக்கு ஹிந்தி கட்டாயம் தேவை, அங்குள்ள மக்களுக்கு அதிகமாக ஆங்கிலம் தெரிவதில்லை ஆனால்100க்கு 95 பேர்ஹிந்தி தெரிந்துள்ளது, இதை நான் ஆந்திராவில் வேலை செய்த பொழுது கண்டுள்ளேன், மேலும் நமது ஊரிலும் வடஇந்தியர்கள் வெகுவாக பெருகி விட்டனர், அவர்களுடன் வியாபார தொடர்பிற்கும் நமக்கு ஹிந்தி தேவை, ஆகவே நிறைய ஆர்வம், தினசரி கொஞ்சம் நேரம் செலவழித்தால் நாமும் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம். தமிழ் மூலம் தமிழ் பற்றுடன் வேறு ஒரு மொழியை கற்றுக்கொள்வதால் தமிழுக்கு யாதொரு தீங்கும் வரப்போவதில்லை, மாறாக தமிழரின் மொழித்திறன் மேம்படுவதுடன், வட்டமும் விரிவாகும்,அண்டை வீட்டாரான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலத்தவர்கள் ஹிந்தியை படித்து பல மத்திய அரசு பணிகளில் நம்மை முந்தி சென்று கொண்டுள்ளனர், எனவே பல வரிகளில் பயனுள்ள இம்மொழியை நாமும் கற்போம், சுவைப்போம்,ஹிந்தி தகவல்?தமிழைபோலவே பல இலக்கிய செல்வங்களும், கலை பொக்கிஷங்களும் கொண்டது ஹிந்தி, அதை வெறுத்து ஒதுக்காமல் சுவைத்து பார்க்கலாமே, மேலும் ஹிந்தி கற்பதன் மூலம்  சமஸ்கிருதம்ஹிந்திமராட்டிகாஷ்மீரிசிந்தி  நேபாளியையும்   உள்ளிட்ட மொழிகளை படிக்க முடியும், ஏனென்றால் இந்த மொழிகளெல்லாம்  தேவநாகரி என்ற எழுதும் முறையில் எழுதப்படுபவையாகும்,    

மேலும்      உள்ளிட்ட மொழிகளை புரிந்து கொள்ள முடியும்,ஏனென்றால் இந்த மொழிகளெல்லாம்  இந்திய-ஆரிய மொழி கள் குடும்பத்தை சேர்ந்தவையாகும், 

முடிந்தவரை jpeg கோப்புகளாக இடுகிறேன்,  அதை தங்கள் கணினியிலோ, மொபைலிலோ சேமித்து வைத்து ஓய்வு நேரத்திலும் படிக்கவும்,பெரியவங்க சென்னது

ஒரு மனிதன் எத்தனை மொழிகளை கற்றுகொள்கிறானோ / அவன்
அத்தனை மனிதர்களுக்கு சமம்
                                                              / பொன்மொழி   

88888888888888888888888888888888888888888888888888888888888


  •  மின்னஞ்சல் மூலம் பெற வலமேல்புறம் உள்ள பெட்டியில் Subscribe செய்யுங்கள் 
அடுத்தவருக்கும் தெரியப்படுத்துங்கள், நண்பர்களுடன் பகிர்ந்து 

கொள்ளுங்கள், 

உங்கள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்க்கும்

                                                                     ஹிந்தி(ய) மாணவன்     

8 கருத்துரைகள்:

விஜயன் said...

நல்ல முயற்சி தொடருங்கள்...

மனோ சாமிநாதன் said...

அருமையான முயற்சி இது! என்னைப்போல வெளி நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் வாழ்பவர்களுக்குத்தான் ஹிந்தி தெரியாமல் இருப்பது நடைமுறை வாழ்க்கையில் எத்தனை சிரமம் என்பது புரியும். ஒரு நல்ல சேவையைத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்!!

சித்ரவேல் - சித்திரன் said...

தொடரட்டும் உங்கள் பணி... ஊக்கமும் உற்சாகமும் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்... பயனும் அனுபவமும் எங்களுக்கு கிடைக்கும்...

நன்றி நண்பரே

gopalakrishnan v said...

நல்ல முயற்சி.நானும் அறிந்துகொள்கிரேன்

நிகழ்காலத்தில் சிவா said...

ஆக்கபூர்வமான முயற்சி.. தொடரட்டும்.
வாழ்த்துகள்

மாணிக்கம் ஈரோடு said...

ஹிந்தி கற்க ஆவலாக உள்ளேன்
தங்கள் பாடங்களை விரைவாக தொடங்குங்குகள்...
நன்றி.........மாணிக்கம்....

sparkkarthi karthikeyan said...

ஊக்ககமும் உற்சாகமும் தந்த அனைவருக்கும் நன்றி,
தாமதமில்லாத பதிவிட முயல்கிறேன்

Pandy Subramanian said...

ஹிந்தி கற்க ஆசை