வலையுலக நண்பர்கள்

Sunday, September 08, 2013

1. திருநீலகண்ட நாயனார்    திருநீலகண்ட நாயனார் மண் ஓடு செய்து சிவனடியார்களுக்கு வழங்கும் தொண்டு செய்து வந்தார்.புலனின்ப நாட்டத்தால் பிற மாதரிடம் சென்ற அவரிடம் அவரது மனைவி திருநீலகண்டத்தின் மீது  ஆணையாக எம்மை தீண்டக்கூடாது என்றார். எம்மை என்று பொதுவாக கூறியதால் மாதர் ஒருவரையும் மனதாலும் தீண்டேன் என்று சிவபெருமான் மீது திருநீலகண்டர் ஆணையிட்டர்.
ஒருசமயம், சிவனடியார்  வேடத்தில் வந்த சிவபெருமான் திருவோடு ஒன்றை கொடுத்து, புனித யாத்திரை செல்வதாகவும், சில காலம் கழித்து வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறி அவரிடம் கொடுத்து சென்றார்
ஆண்டவன் திருவிளையாடலால்  அது மறைந்த்து. பல வருடங்களுக்கு பிறகு  அதே சிவனடியார்  வேடத்தில் வந்த சிவபெருமான் அந்த திருவேட்டை தருமாறு கேட்டார், திருநீலகண்டரோ அது திடீரென்று காணாது போய்விட்டதாக கூறினார்.. திருவோடு உண்மையிலேயே காணாமல்தான் என்று ஊரரிய  மனைவியின் கரம் பற்றி கோவில் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய சொன்னார் சிவனடியார்  வேடத்தில் வந்த சிவபெருமான் .  ஊரரிய தனது சபதத்தை பற்றி சொன்ன திருநீலகண்ட நாயனார், சிறு மூங்கிலின் இரு முனையை பற்றி தாங்கள் இருவரும்  மூழ்கியெழுவதாக சொன்னார், அதுபோலவே திருநீலகண்ட நாயனார் அவரது மனைவியுடன்  மூழ்கியெழுந்தார், ஈசனருளால் தங்கள் முதுமைகோலம்  இளமையுடன் எழுந்த இவர்கள்  தங்கள் இழந்த வாழ்வை வாழ்ந்து  சிவமயத்துடன் இணைந்தனர்.


திருநீலகண்ட நாயனார் பற்றி விரிவாக படிக்க சொடுக்கவும்
1,திருநீலகண்ட நாயனார்

0 கருத்துரைகள்: