வலையுலக நண்பர்கள்

Monday, September 09, 2013

2.இளையான்குடி மாறநாயனார்


        இளையான்குடி மாறநாயனார் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர்.தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்பே தான் உணவுண்ணும் பழக்கமுடையவர். செல்வ செழிப்பான அவர் சிவனடியார்களுக்கு உணவளிக்கும் பண்பை தவறாது கடைபிடித்து வந்தார். வறுமை நிலையிலும் தனது வழமை தவறாது கடைபிடிப்பவர் என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், ஒரு நாள் நள்ளிரவில் நல்ல மழை நேரத்தில் சிவனடியார் வேடத்தில் பசி என்றனத்தி மாறனார் இல்லம் வந்தார். வீட்டிலோ உணவேதும் இல்லை, சற்றும் மனம் கலங்காத மாறனார், கூடையெடுத்து தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு அன்று பகலில் தனது வயலில் விதைத்த விதை நெல்லை எடுத்துவர கிளம்பினார், வயலில் இருந்து சேகரித்து வந்த விதை நெல்லை தனது மனைவியிடம் தந்து சிவனடியார்க்கு அமுது படைக்க கொடுத்தார், தனது வீட்டு உத்தரத்தில் இருந்த மரத்தை உடைத்தெடுத்து விறகாக பயன்படுத்தி அவருடைய மனைவியார், சாதமும், கீரையும் தயார் செய்தார். உண்ணவந்த சிவனடியாரை காணாது திகைத்த மாறநாயனாருக்கு சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அடியாக்கு உணவளித்த அடியாரே  நீ உன் இல்லாலுடன் சிவலோகமடைந்து பேரிண்பமடைவாயாக என திருவருள் புரிந்தார்.


இளையான்குடி மாறநாயனார் பற்றி விரிவாக படிக்க சொடுக்கவும்

0 கருத்துரைகள்: