வலையுலக நண்பர்கள்

Saturday, September 07, 2013

மஹாவீர் சக்ரா கேப்டன் மகேந்திரநாத் முல்லா

100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய இங்கிலாந்தின் டைட்டானிக் கப்பல் பற்றி நமக்கு தெரியும்.
ஆனால், 1971, டிசம்பர் 9 அன்று இந்திய பாகிஸ்தான் போரில் 19 பேருடன் மூழ்கிய நம் இந்திய கப்பற்படை கப்பல் பற்றி எத்தனை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன ?
இந்திய கப்பற்படையின் INS Khukri என்ற போர்கப்பல் இந்திய பாகிஸ்தான் போரின்போது அரபிக்கடலில் , குஜராத்தின் டையூ (Diu) பிரந்தியத்தில் ரோந்து பணியில் இருந்த்து.
அது இரவு நேரம், அப்போது அங்கு வந்த பாகிஸ்தானின் டாப்னே வகை (Daphne Class) ஹாங்கர்  (Hangor) என்ற  நீர் மூழ்கிகப்பல்,INS  குக்ரி போர் கப்பலை குண்டு வீசித்தாக்கியது.
எதிரியின் குண்டு வீச்சால் தாக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில்  INS குக்ரி கடலில் மூழ்க ஆரம்பித்த்து, கடற்படை அதிகாரிகள் 18 பேரும் வீரர்கள் 178 பேரும் கப்பலுடன் கடலில் மூழ்கி இறந்தனர், கடலில் குதித்து உயிர்பிழைத்தவர்கள் 67 பேரே.
INS குக்ரியின் தலைவர் கேப்டன் மகேந்திரநாத் முல்லா, கப்பலிலிருந்து குதித்து தப்பிக்க உதவும் சாதனத்தை (Life Jacket) தனது இளநிலை அதிகாரிகளுக்கு கொடுத்து விட்டு தப்பி செல்ல உத்தரவிட்டார், மேலும் தன்னால் முடிந்தவரை வீரர்கள் கடலில் குதித்து தப்பிக்க உதவினார்,
                          
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய கமான்டர் மனுசர்மா கூறியதாவது  "என்னையும் எனது சக அதிகாரி லெப் டினென்ட் குன்டன்மாலையும் பார்த்த கேப்டன் முல்லா  ''குதியுங்கள் உடனே "" என்று கத்தினார். எங்களது தயக்கத்தை புரிந்துகொண்டு ''என்னைபற்றி கவலைப்படாதீர்கள்'' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டே எங்களை கடலில் தள்ளிவிட்டார்.
நாங்கள் இருவரும்  கடலில் சிறிது தூரம் நீந்தினோம், இருட்டில் ஒருவரை ஒருவர் விட்டு விலகி விட்டோம், உடன் வந்தவரைத்தேடி கப்பலை நோக்கி திரும்பிப்பார்த்தேன், அப்போது எங்கள் கப்பல் எனக்கு மிக அருகிலேயே மூழ்கிகொண்டிருந்த்து, கப்பலின் மேல்தளத்தில் பக்கவாட்டு கம்பியின்மேல் சாய்ந்து சிகரெட் புகைத்தபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் கேப்டன் முல்லா.
என் கண்ணெதிரிலேயே எங்கள் கப்பலும் என்ஜின் அறையிலிருந்து வெயியே வரமுடியாமல் சிக்கிய அதிகாரிகளும் , வீரர்களும்அந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை விட்டு பிரியாத கேப்டன் மகேந்திரநாத் முல்லாவும் ஜலசமாதி  ஆயினர்.
கேப்டன்கள்  ஒருபோதும் தங்கள் கப்பலை கைவிடமாட்டார்கள் என்பது கடற்படையின் எழுதப்படாத விதி. அதை நடைமுறையில் நிருபித்துக்காட்டியவர் கேப்டன் முல்லா.
அன்று மரணமடைந்த வீர்ர்களுக்காக டையூ நகரில் ஒரு நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது.. சிறு குன்றின்மேல் கடலை பார்த்தபடி வைக்கப்பட்டுள்ள குக்ரி யின் மாதிரி வடிவம், அங்கு வருவோருக்கெல்லாம் கேப்டன் முல்லா வின் தியாகம் பற்றி மௌனமாக ஆனால் அழுத்தமாக கூறி வருகிறது,
ராணுவத்தின் இரண்டாவது உயரிய மஹாவீர் சக்ரா விருது (இறப்பிற்கு பிறகு) கேப்டன் மகேந்திரநாத் முல்லாவிற்கு வழங்கப்பட்டது,
நன்றி ஸ்ரீராமகிருஸ்ண விஜயம்

                       ஜெய் ஹிந்த்!!!


2 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

கேப்டன் முல்லா அவர்கள் போற்றப்பட வேண்டியவர்... சிறப்பான தகவலுக்கு நன்றி நண்பா...

ஜெய் ஹிந்த்...

ஸ்கூல் பையன் said...

கேப்டன் முல்லா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யுட்....