வலையுலக நண்பர்கள்

Friday, September 27, 2013

ஹோட்டல் ஜோதி உயர்தர அசைவஉணவகம்

       முன்பெல்லாம் எந்த ஊரிலும் ஹோட்டல்கள் கிடையாது, சொந்த ஊரைவிட்டு வெளியூர் செல்லும் வேலைகளும் அவ்வளவாக கிடையாது. பக்கத்து ஊரிலுள்ள உறவினர்களை பார்க்கவோ அல்லது அவர்கள் இல்ல விசேஷங்களில் கலந்து நிலை இருந்தாலும், வீட்டிலிருந்தே கெட்டுப்போகாத பக்குவத்தில் செய்யப்பட்ட கலவை சாதங்களை (Veriety Rice) பாக்குமட்டைகளில் கட்டி (கட்டுசோறு) எடுத்துக்கொண்டு கால்நடையாகவோ, அல்லது வசதி படைத்தவர்களாக இருப்பின் மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற கால்நடைகள் இழுத்துச்செல்லும் வாகனங்களிலோ பயணப்படுவர். செல்லும் வழியில் மாலை இருள் சூர்ந்துவிட்டால் இதுபோல செல்பவர்களுக்காகவே அந்த காலத்து டைப் வீடுகளின் முன் கட்டப்பட்டிருக்கும் திண்ணையிலோ அல்லது தர்ம/அன்ன சத்திரங்களிலோ தங்கி விடிந்ததும் தங்கள் பயணத்தை தொடர்வர்அந்த திண்ணை அல்லது தர்ம/அன்ன சத்திரங்களில் உள்ளவர்களும் தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் போன்று உபசரத்து அனுப்புவர், மேலும் புனித யாத்திரைக்கு செல்பவர்களுகாகவே  தங்குமிடம்தர்ம/அன்ன சத்திரங்களை இறைபக்தியுள்ள அன்பர்கள் பலர் கட்டியிருப்பர், அதில் தங்கி/உண்டு தங்கள் பயணத்தை தொடர்வர், காசி வரை செல்பவர்கள் கூட மாற்று துணி மட்டும் எடுத்துக்கொண்டு இதுபோன்ற சத்திரங்களின் உதவியால் கால்நடையாகவே காசியை அடைந்தவர்களும் உண்டு. (இன்றைய கட்டுமானத்தில் திண்ணை என்ற அமைப்பே இல்லாமல் போனது தனிக்கதை)

விஜயநகர மன்னர்கள காலத்தில்தான் காசு கொடுத்து உணவு உட்கொள்ளும் சிஸ்டம் அறிமுகமானதுபிறகு நாளாக நாளாக பழைய வழக்கம் ஒழிந்து இந்த புதிய வழக்கமே பல்கி பெருகி இன்று வீதிக்கு நான்கு உணவகங்கள் வந்துவிட்டன.

சுவை, தரம், சுத்தம் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பெரிதாகவே சிறிதாகவே உள்ளது. இருந்தாலும் ஆத்மார்த்த அர்பணிப்புடன் பரிமாறக்கூடிய உணவகங்கள் மிக குறைவே, லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்கும் உணவகங்கள்தாம் மிக அதிகம், அப்படிப்படிப்பட்ட எனக்கு தெரிந்த நல்ல உணவகங்களை அறிமுகப்படுத்தும் தொடர் பதிவே இது…..


      
ஹோட்டல்  ஜோதி
      உயர்தர  அசைவஉணவகம்
கோவை சாய்பாபாகாலனி அருகில் கோவில் மேடு, தடாகம் ரோட்டில்,
அமைந்துள்ள ஹோட்டல் இது.


என் அனுபவத்தில் விலை குறைவாகவும் சுவை மற்றும் தரம் உயர்வாகவும் உள்ள சில ஹோட்டல்களில் இதுவும் ஒன்று.
மூன்று கிலோமீட்டர்  வரை டோர் டெலிவரியும் உண்டு. (அந்த வழியாக செல்ல வாய்புள்ளவர்கள் கண்டிப்பாக டேஸ்ட் பண்ணவும்). மதியம் இரவு மட்டும் சேவை உண்டு, இரவு வேளைகளில் சிறிது காத்திருந்துதான் சாப்பிட வேண்டும் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த 2 கி.மி சுற்றளவில் இதுபோன்ற உயர்தர  அசைவஉணவகம் இல்லை.
அவர்களுக்கு செந்தமாக சிக்கன் கடையும் உள்ளதால் சிக்கன் ஃபிரஷ்ஷாக இருக்கு,




 
கடை உரிமையாளர் :
ஆனந்தகுமார்- 9442950606

0 கருத்துரைகள்: