வலையுலக நண்பர்கள்

Friday, August 01, 2014

பிணி நீக்கி வளம் சேர்க்கும் புள்ளிருக்குவேளூர் வைத்திய நாதர் மற்றும் அங்காரகன்

தன்னை அடைந்தார்க்கு இன்பங்கள் அள்ளித்தருபவன் இறைவன்.அவன் தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்தருளும் பொருட்டு மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி,வைத்தியநாதன் என்ற பெயருடன் சிவலிங்க வடிவில்
எழுத்தருளி இருக்கும் தளம் புள்ளிருக்குவேளுர்.

ஜடாயு என்னும் புள்,இருக்கு வேதம், வேள் என்னும் முருகன் மற்றும் ஊர் என்னும் சூரியன் ஆகிய நால்வரும்   பூசித்தமையால்இந்தத் திருத்தளம் புள்ளிருக்குவேளுர் என்று பெயர் பெற்றது.இன்றைய் நாட்களில் இது வைத்தீஸ்வரன் கோயில் என்று கொன்டாடப் படுகிறது.
முருகன், சூரன்மார்பைப் பிளக்க  வேல் வாங்கியது இந்த்த் திருத்தளத்தில் தான். இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்த்த திருவுளங்கொண்டு தையல் நாயகி அம்மை தைல பாத்திரமும், சஞ்சீவியும்,வில்வமரத்து அடி மண்ஷம் எடுத்துக் கொண்டு தம்முடன் வர வைத்தியராகி  வீற்று அருள் பாலிப்பது இந்த்த் தளத்தில் தான்.
அறுசுவையோடு கூடிய உணவை அடியார்க்கு உண்பித்துமாகேசுவரபூசை செய்யப் பெருவதும் இந்த்த் தலத்தில் தான்.
பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்களைக் கொண்டதும் இத்தலமே!
வைத்தீஸ்வரன் கோயிலின் மையத்தில் நாற்புறமும்  உயர்ந்த மதில்களால் சூலப் பட்டு அழகுடன் காட்சி தருகிறது ஆலையம்.
ஆலையத்தின் கீழ்த்திசையில் வீரபத்திர்ரும் மேற்கு திசையில் வைரவரும் தென் திசையில் கற்பக விநாயகரும் வட திசையில் காளியும் காவல் புரிகின்றனர்.
மேலைக் கோபுர வாயில் வழியே ஆலையத்துள்  நுழைந்தால் வெள்ளியாலும் தங்கத்தாலான இரு கொடி  மரங்கள் மேற்கு  வெளிப் பிரகாரத்தின் கீழ்ப்புறம் ஆறுமுகக்குமாரருக்குத்  தனிக் கருவரை.
வடக்கு பிரகாரத்தில் ஆவுடையம்மன் எனும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. செல்லமுத்துக்குமாரர் சன்னதிக்கு ஒரு சிறுகோபுரம் அமைந்துள்ளது, இக்கோபுரத்தின் தென்புறம் ஜ்உரஹரேசுவரர், நவகிரக மண்டபம். கிழக்கு முகமாக தண்டாயுதபாணி ஆகிய மூலவர்கள் எழுந்தருளியுள்ளனர்.
வைத்யநாத சுவாமி சந்நிதானம் மேற்கு நோக்கியும் தையல்நாயகி அன்னையின் சந்நிதானம் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
சுவாமி சந்நதியிலுள்ள கொடிமரங்களுக்கு வடக்கில் தையல்நாயகி அன்னையின் தனிக்கோயில் அமைந்துள்ளது. அம்மன் சந்நதியில் சித்தாமிர்த தீர்த்தம் இருக்கிறது.
இறைவனையும் அன்னையையும் வலம்வர தனித்தனி பிரகாரங்கள் அமைந்துள்ளன.
மடப்பள்ளியில் அன்னபூரணி அம்மன் திருவுருவம் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி மூலவர்.
வடக்குப் பிரகாரத்தில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார். இப்பிரகாரத்தில் வடக்கு முகமாக நின்றருளும் துர்க்கை மகிமை மிக்கவள். கீழைத்திருமாளிகைப்பத்தியில் சூரியன் அங்காரகன் நீங்களாக நவகிரகங்கள் அமைந்துள்ளன.
ஸ்ரீ செல்வமுத்துக்குமார்ருக்கு அர்த்த ஜாமப் பூஜையில் சார்த்தப் படும் நேத்திரப் பிடி சந்தனம், ஜடாயு குண்டத்தின் திருநீறு, வைத்தியநாதரிடத்தில் நோய்  நீக்குவதற்காக வேண்டிக் கொண்டு பெறும் திருச்சாந்துருண்டை ஆகியவைகளை வேண்டி விரும்பி அணிந்து, அருந்தியும் வருபவர்களுக்கு பலவிதப் பிணிகள் அகலும்.
தெற்கு முகமாகத் தனிக்கோயில் கொண்டு அங்காரகன் அருள்பாலிக்கிறார். இவரது பிறப்பு வரலாற்றைப் பற்றி புராணங்கள் பலவாரு புகள்கின்றன.
ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவியைப் பிரிந்து தனித்திருந்தார். கல்லால மரத்தின் கீழ் யோகத்தில் இருந்தபோது அவரது நெற்றிக் கண்ணியலிருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியிலிருந்து பிறந்தவர் அங்காரகர். அதனால் அவர் பூமியின் மகன் குஜன் என்று அழைக்கப் படுவதாக நவில்கிறது ஒரு புராணம்.
பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமிதேவியால் வளர்க்கப்பட்டவர்தான் அங்காரகர் என்கிறது ஒரு புராணம் .
ஒரு சமயம் சினங்கொண்ட சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய வீரபத்திர்ர் தட்சனின் யாகத்தை அழித்தபிறகு தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிக்கோபம் தணிந்து அங்காரக வடிவம் பெற்றார் என்கிறது பிரிதொரு புராணம்.
நவகிரகங்களில் ஒருவரான அங்காரகனையே ஒருசமயம் சருமநோய் பீடித்து வாட்டியது. செவ்வாய்,  


இத்தளத்தில் உள்ள சித்தாமிர்தத்தீர்த்தத்தில் நாற்பத்தைந்து தினங்கள் மூழ்கி எழுந்து , வைத்தியநாதசாமியை வழிபட்டு, நோயிலிருந்து விடுபட்டு நலமடைந்தார். எனவே இது அங்காரகஸ்தளம் எனப் பெயர் பெற்றது.
திருத்தலக் குறிப்புகள்
 
தலத்தின் பெயர்:
திருப்புள்ளிருக்கு வேளுர் என்னும் வைத்தீஸ்வரன் கோயில்.
சுவாமியின் திருநாமம்:  
 ஸ்ரீ வைத்தியநாதர்,அங்காரகன்
எங்கே உள்ளது :
தமிழ்நாட்டில், சீர்காழிக்கு அருகில்
எப்படிச்செல்வது :
சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் சீர்காழிக்கு ரயில்,பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். சீர்காழியிலிருந்து பேருந்து, கார் மற்றும் ஆட்டோ மூலம் வைத்தீஸ்வரன் கோயிலைச் சென்றடையலாம்.
எங்கே தங்குவது:
சீர்காழியில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம்:
காலை 6.00 முதல் பகல் 1.00  வரை
மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை.
கோயில் முகவரி:
மேலாலர்
ஸ்ரீ வைத்தியநாதஸ்வதஸ்வாமி தேவஸ்தானம்
வைத்தீஸ்வரன் கோயில் அஞ்சல்- 609 117.
சீர்காழி வட்டம்.
தொலைபேசி:04364 - 24794231 கருத்துரைகள்:

Anonymous said...

Om Namashivaya