வலையுலக நண்பர்கள்

Friday, August 22, 2014

புதன்சகல கலைகளிலும் வல்லவர், மகாஞானியாக விளங்குபவர், கிரகங்களில் சுபகிரகம். தன்னை வழிபடுபவர்களுக்கு  கல்வி, அறிவு,பேச்சுத்திறமை, இசை,ஜோதிடம், கணிதம், சிற்பம்,மருத்துவம், மொழிகளில்  புலமை ஆகியவற்றைத் தர வல்லவர்கல்விக்குக் காரகாரராக  விளங்குவதால் வித்யாகாரகன் என்றும்  ஞானகாரகன் என்றும் இவரைக் கூறுவர். தீய கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும்  ஆற்றல் உடையவர். முக்கணங்களில் சாந்தகுணம் கொண்டவர்.   இவரது மனைவியின் பெயர் இலை , புத்திரரின் பெயர் புரூரவர்,
புதன் பகவானுக்கு புதன் கிழமைகளில் அபிஷேகம் செய்வித்து, பச்சை வஸ்த்திரம்,மரகதமணி, வெண்தாமரை, ஆகியவற்றால் அலங்காரம் செய்து, புதன்
மந்திரங்கள் ஓதி நாயுறுவி சமித்தால் யாகத்தீயை எழுப்பி  பாசிப்பயத்தம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து ,தூப தீப நெய்வேத்தியம் காட்டி, பிராத்தனை செய்தால்  புதன் கிரக தோஷம் நீங்கும்.இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி !!
பதந்தந் தருள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி !!

0 கருத்துரைகள்: