வலையுலக நண்பர்கள்

Sunday, August 24, 2014

குரு பகவான்


                                                
பிரம்ம தேவரின் மானச புத்திரர்க

 ளில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவளுக்கும் பிறந்த பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையே குருபகவான் ஆவார். இவர் அறிவிலே  மேம்பட்டவர். தேவர்களில் குருவாகத் திகழ்பவர்.

 இந்திரனுக்கு அமைச்சராக இருப்பவர்.

சுப கிரகர் முக்குணங்களில் சாத்வீக குணமுடையவர். மஞ்சள் நிறமுடையவர். அதனால் இவரைப் பொன்னன் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாளசிந்தை உடையவர்.

இவருக்கு தாரை, சங்கினி என்று இரு மனைவியர். பாரத்வாஜர், யமகண்டன், கசன் என்று மூன்று புத்திரர்கள். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர் பதவிகளையும், மன மகிழ்ச்சி, திருமணப்பேறு , புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றையும் கொடுப்பவர்.

தக்ஷ்ணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்துவருவதாலும் மஞ்சள் கரை வஸ்த்திரம் உடுப்பதாலும், புஷ்ப்பராக மணியைத் தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்த்திர தானம் செய்வதாலும், கடலை தானியத்தை தானம் செய்வதாலும் குருவார விரதம் இருப்பதாலும் குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

 

குணமிகு வியாழக் குருபகவானே

மணமுடன் வாழ மகிழ்வுடருள்வாய் !

பிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா

கிரக தோமின்றிக் கடாஷித் தருள்வாய் !!

 

 


0 கருத்துரைகள்: