வலையுலக நண்பர்கள்

Wednesday, August 27, 2014

வெள்ளி - சுக்கிரன்

http://athavannews.com/wp-content/uploads/2014/04/Tamil-Daily-News-Paper_92307245732.jpg

வெள்ளி  நிறம் கொண்டவர், அதனால் சுக்கிரன் வெள்ளி போன்ற பெயர்கள் பெற்றவர், ஐங்கோண மண்டலத்தில் வெண் பட்டாடை உடுத்தி, வெண்தாமரை மலர் சூடி கருட வாகனத்தில் வீற்றிருப்பவர், முதலை வாகனமும் கொண்டவர்.

சுக்கிர பகவான் அழகானவர், கலாரசிகர், சகலகலா வல்லவர்,பெரும் கவி, சுக்ரநீதி என்ற நீதி சாஸ்திரம் எழுதியவர், மழைக்கு அதிகாரியாக இருப்பவர், தன்னை வழிபடுபவருக்கு நன்மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும், சுபபோகத்தையும் தருபவர்.

சக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து,வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண்தாமரை மலரால் அலங்காரம் செய்து, சுக்கிர மந்திரங்களை ஓதி, அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பிமொச்சைப்பொடியன்னம், தயிரன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து, அர்ச்சனை செய்து, தூப, தீப நைவேத்தியம் கொடுத்து பிரார்த்தனை  செய்தால் சுக்கிர கிரஹதோஷம் நீங்கும்.

 

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய் !

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே !!

0 கருத்துரைகள்: