வலையுலக நண்பர்கள்

Tuesday, August 05, 2014

சந்திரன்


சந்திரபகவான் சுப கிரகர். சிவபெருமானது முக்கண்களில் இடது கண்ணாகத் திகழ்பவர்.
இடகலை நாடியாக இருப்பவர்.

சாத்வீக குணமுடையவர். மன்மதனுக்கு வென்கொற்றக்
குடையாக விளங்குபவர். பயிர்களை வளர்ப்பவர். அழகுடையவர் உயிர்க்கு போகங்களை ஊட்டுபவர்.
சந்திர பகவானுக்கு வெள்ளாடை, முத்துமாலை, வெள்ளை அலரி, வெள்ளை அல்லி போன்றவற்றால்
அலங்காரம் செய்து
 அர்ச்சித்தும், பௌர்ணமி விரதம் இருந்தும், வெள்ளாடை தானம் செய்தும்,
அரிசி தானம் கொடுத்தும்,சந்திர மந்திரங்களை ஓதி முருங்கை சமித்தினால் யாகத் தீ எழுப்பிப்பச்சரிசி, பாலன்னம், தயிரன்னம், ஆகியவற்றை ஆகுதி செய்தும்,
தூப நைவேத்தியம் செய்தும்
பிராத்தித்தல் சந்திர கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய இயலும்.  

  

 எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி! திருவருள் தருவாய்
சந்திரா போற்றி! சத்குரு போற்றி!
சங்கடந்தீர்ப்பாய் சதுர போற்றி !

1 கருத்துரைகள்:

muralikrishnan said...


மிகவும் நல்லது செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்று நம்புகிறேன்