வலையுலக நண்பர்கள்

Saturday, September 13, 2014

நாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு


திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிவாலயம். சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.


பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் ஆலயத்தின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். நாகராஜன் இத்தல சிவபெருமானை வழிபட்டதன் பின்ன்னியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு அடங்கி இருக்கிறது.           சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒரு சமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது.    இதையறிந்த முனிவர்கோபம் கொண்டார். தன் மகனைத் தீண்டிய தக்ககன் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார். சித்தம் கலங்கிய தக்ககன்  , சாபவிமோச்சனம் பெற, காஷ்யப முனிவரை அணுகி ஆலோசனை கேட்டான்.

  பூலோகத்தில் லிங்கப்பிரதிஷ்டை செய்து, சிவ பூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும் என காஷ்யப முனிவர் அருளினார்.  அவர் சொல் ஏற்று பூலோகம் சென்று, சிவலிங்க பூஜை செய்தான் தக்ககன். சிந்தை குளிர்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார்.
ஆலயத்தின் பிரதான வாயிலான கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளையுடைது. நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ள சூரிய தீர்த்தத்தின் கரையில் மழுப்பொருத்த விநாயகர் சந்நதி உள்ளது. இத்தலத்தின் தென்பிரகாத்த்தில் தல விநாயகர் சந்நதி உள்ளது. இவருக்குசான்று விநாயகர்என்று பெயர். நாகராஜன் சிவனை வழிபட்டதற்கு சான்றாக விளங்கியதால் இவர் சான்று விநாயகர் என்று பெயர் பெற்றிருக்கிறார். இவருக்கு நாகராஜ கணபதி என்ற பெயரும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜ உருவம் உள்ளது. கருவறையில் தக்ககன் வழிபட்ட நாகநாதர் மிக எளிமையாக காட்சி அருள்கிறார்.
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கிமுனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தாநாரீஸ்வர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார். பார்வதியின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் , அவருக்குத் தன் உடலில் பாதியை வழங்கி உமையொருபாகனானார். எனவே இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவபார்வதி காட்சியளிக்கின்றனர்.

தவம் செய்த அன்னை பிறையணியம்பாள் ஆலயத்தில் ஒரு தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறாள். அம்மையும் அப்பனும் தவிர இக்கொயிலில் ஒரே சந்நித்யில் கிரிகுஜலாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் காட்சி தருகின்றனர்.
பிருங்கி முனிவருக்காக முப்பெரும் தேவியராக காட்சியளித்த்தின் அடிப்படையில் மூவரும் ஒரே சந்நிதியில் அமையப் பெற்றிருக்கின்றனர். மார்கழியில் மூன்று தேவியருக்கும் புனுகு சார்த்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த தேவியரை தரிசிக்க இயலாது.அந்நாட்களில் சன்னதி முன்புள்ள திரைச் சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசியில் வெள்ளியன்று சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன.

இங்கு முப்பெரும் தேவியரை வணங்கி இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.  கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும் , அருகில் ராகுபகவான் யோகராகு என்றபெயரிலும் இருக்கின்றனர். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோகராகுவையும், வணங்கினால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை .
நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதாலேயே சிவபக்த கிரகமாகிய ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனையாள்களுடன் தங்கிவிட்டார். பிற்காலத்தில் இங்கு ராகுவிற்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.நாகவள்ளி, நாக்கன்னி என்ற இருவரையும் சேர்த்துஇருவருக்கான தனிச்சன்னதி இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நாகநாத சுவாமி கோயிலில் தனது தேவியர்களுடன் மங்கல ராகுவாக எழுந்தருளியிருந்து தம்மை வழிபடுவோர்க்கு பல நன்னைகளையும் இவர் அருளுவது சிறப்பான ஒன்றாகும்.பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சியளிக்கிறார்.ராகுவை இந்தக் கோலத்தில் காண்பது அபூர்வம்.
இத்தலத்தில்  ,இவருக்கச்  செய்கின்ற பாலாபிஷேகத்தின் போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்போது  பாலின் நிறம் நீலமாகிவிடுகின்ற அதிசயம் அகிலத்தில் எங்கும் காணக் கிடைக்காத தனித்தன்மை பெற்ற ஒரு விஷயமாகும்.
1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது  தனது சட்டையை மாலையாக ராகுபகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது.  அந்த இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் போழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
நாகராஜனுக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்வதாலும் கோமேதக மணியை அணிந்து கொள்வதாலும் உளுந்து தானியத்தைத் தானம் செய்வதாலும் ராகுகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இத்தலத்தில் உள்ள ராகு பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை,வெள்ளிக்கிழமைகளில்  விரதமிருந்து ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்வதாலும், கருமை, நீலத் துணிகளைச் சாத்தி, நீல நிற மலர்களாலும் அர்ச்சித்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, எள்ளு சாதம் நிவேதன்ம் செய்ய தோஷங்கள்நீங்கும்.

திருத்தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர் :   ஸ்ரீ நாகநாதசுவாமி, ராகு
எங்கே உள்ளது :  தமிழ்நாட்டில், கும்பகோணத்தில்
எப்படிச்செல்வது : சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும்  கும்பகோணத்திற்கு ரயில்,
பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். 
கும்பகோணத்திலிருந்துபேருந்து, கார் மற்றும்
ஆட்டோ மூலம் திருநாகேஸ்வரம் சென்றடையலாம்.
  எங்கே தங்குவது :   கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும்,   உணவுவிடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம்:
காலை 6.00 முதல் பகல் 12.45 வரை
மாலை 4.00 முதல்இரவு 8.30 வரை
கோயில் முகவரி:
நிர்வாக அதிகாரி, நாகநாதசுவாமி திருக்கோயில்,
திருநாகேஸ்வரம் 612204,தஞ்சை மாவட்டம்,
தொலைபேசி : 0435246 3354.

Thursday, September 04, 2014

சனி பகவான்

சனீஸ்வரன் தாமஸ குணமுள்ளவர். இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என மூன்று  மனைவியர். குளிகன் என்றொரு மகன்.
இவர் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். அவரவர் கர்மவினைப்படி வறுமை, கலகம், நோய், அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர்.
ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல இடத்தில் தங்கி வலுவும் பெற்றிருப்பாரானால் அளவற்ற நலன்களை வாரி வழங்குவார்.
சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், கருங்குவளை போன்றவற்றால் அலங்காரம் செய்து, சனீஸ்வர மந்திரங்களை ஓதி,வன்னிச்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளு தானியம், எள்ளுப்பொடி அன்னம் ஆகுதி செய்து, நல்லெண்ணை தீபமேற்றி, அர்ச்சனை செய்து, தூப,தீப நைவேத்தியம் செய்து ப்ரார்த்தனை செய்தால் சனிகிரக தோஷம் நீங்கும்.

Tuesday, September 02, 2014

அள்ள, அள்ளக்குறையாமல் கொடுக்கும் வள்ளல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரர்


முன்பொரு சமயம்  நிடத நாட்டை நளன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை சுயம்வரத்தின் மூலம் விவாகம் செய்தான்

தமயந்தி தனக்குக் கிட்டாத்தால் கலிபுருஷன்  நளன் மீது அழுக்காறு கொண்டார். நளனைப் பழிவாங்க நல்லதொரு சமயம் எதிர்பார்த்திருந்தார். ஒரு நாள் அந்திப் பொழுதில் நளன் இறை வழிபாட்டுக்காகத் தன்பாதங்களை தூய்மை செய்தபோது பின்னங்காலில் தண்ணீர் படவில்லை. சனிபகவானுக்கு நளன் குற்றம் புரிந்தான் என்பதற்கு இதுவே  போதிய காரணமாயிற்று. அவனைப் பற்றிக் கொண்டார்.

சனி புத்தியின் காரமாய் நளன் புட்கரன் என்ற அரசனோடு சூதாடி நாட்டை ந்தான். நால்வகைப் படைகளையும் இழந்தான். மனைவி க்களோடு  நாட்டை விட்டுச் சென்றான். பிள்ளைகளாவது

வருத்தமின்றி வாழட்டும் என்று தன் மாமன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். மனையாளோடு கானகம் சென்றான். காதலியைக் கானகத்தில் காரிருள் தனிமையில் கைவிட்டுப் போகுமாறு சனீஸ்வரன் நளன் மனதை வேறுபடுத்தினான்.


பொழுது புலர்ந்த்தும் கணவனைக் காணாமல் கதிகலங்கினால் தமயந்தி. சுவாதகுகன் என்ற மன்னன் அவளை அவளது தாய் வீட்டில் கொண்டு சேர்த்தான்.


கானகத்திலோ நளனைக் கார்கோடன் என்னும் சர்ப்பம் தீண்டியது. அவனை அழகற்றவனாக்கியது. கரிய மேனியும் விகாரமான தோற்றமும் கொண்டு நளன் வாகுனன் என்ற பெயருடன் இருதுபன்னன் என்னும் மன்னனிடம் தேர்ப்பாகனானான்.


தமயந்தி நளனோடு மீண்டும் சேர தந்தையிடம் மறு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யக் கோரினாள். சுயம்வரத்திற்கு மன்னன் இருதுபன்னன் நளனைத் தேரோட்டியாக அமர்த்திக் கொண்டு வந்து சேர்ந்தான்.


அரண்மனை சமயற்கூடத்தில் தன் பிள்ளைகளிடம் வாகுனன் காட்டிய பேரன்பைக் கண்ட தமயந்தி அவனே தன் கணவன் என்பதை உணர்ந்தாள்.


அவள் தந்தையும் வாகுனனை அழைத்துக் கேட்க நளன் உண்மை தெரிய வரும் நேரம் நெருங்கியதை உணர்ந்தான்


கார்கோடன் கொடுத்த அது காலம் வரை மறைத்து வைத்திருந்த அரவுரியை அணிய அவனுடைய அவலட்சனம் மறைந்து அழகே உருவான நளனாய் மாறினான். அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.


நளன் மனையாள் மக்களோடு இனைந்தான். மாமனின் சேனைகளுடன் புட்கரனைப் போரில் வென்றான். நாடு மீட்டான். அனைத்தையும் மீண்டும் அடைந்த பின்பும் நளன் மனதில் அமைதி இல்லை.அவன் அவைக்கு வருகை புரிந்த நாரதர். நளனின் மன அமைதி இல்லாமைக்குக் காரணம் சனியே என்றும் சனி விலக திருத்தல பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.


நளன் மனைவி மக்களோடு திருத்தலப் பயணம் மேற்கொண்டான். வழியில் விருத்தாசலத்தில் பரத்வாஜ முனிவரைக் கண்டு வணங்கினான். பரத்வாஜர் நளனிடம் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் சனிபகவான் விலகிட, சாந்தி நிலவும் என அருளுரை கூறினார்.நளன் திருநள்ளாறு அடைந்தான். தீர்த்தம் ஒன்றை உருவாக்கி நீராடினான். ஆலயத்துள் நளன் குடும்பத்துடன் அடியெடுத்துவைத்த கணமே சனிபகவான், நளனை இனியும் பிடித்திருத்தல் தகாது என விலக நினைத்தார். இருந்தபோதும் முழுதாய் விலகவில்லை.


தர்ப்பாரண்யருக்குப் பாயந்து மூன்றாம் கோபுர வடக்குப் பக்க மாடத்தில் மறைந்து கொண்டார்.


சர்வேஸ்வரன் தம்மை வணங்கி நின்ற நளன் குடும்பத்திற்கு பெருங்கருணை புரிந்தார். சனிபகவானிட்மும்  தம்மை வழிபடும் அடியவர் அவரையும் வழிபடுவர் என்று அருளினார். ஒளிந்து கொண்டிருந்த மாடத்திலேயே வீற்றிருந்து அவரை வழிபடும் அடியவர்களின் துன்பம்  தீர்த்து  இன்பம்  அருள  திருவாய்  மலர்ந்தார்.அப்போது நளன் தன் மனதில் இருந்த மலை போன்ற சுமை விலகியதை உணர்ந்தான். மனைவி மக்களும் பாரம் நீங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.


சனி பகவானால் பீடிக்கப் பெற்றவர்கள் எவராயினும் திருநள்ளாற்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் தொழுதால், எல்லாத் தொல்லைகளும் தீர்ந்து நலங்கள் பெறுவார்கள்.


திருக்கோயில் திருநள்ளாற்றின் மையத்தில் அமைந்துள்ளது. ஏழு நிலை  ராஜகோபுரம். உட்புகுந்தால், அகலமான முற்றவெளி. இடப்பும் இடையனார் கோயில்.


ரண்டாம் பிரகாரத்தில் அம்பாள் சன்னிதியின் தெற்கு கோபுர வாயில். இங்கே நந்தவனமும், காளத்தி நாதர் கோயிலும்  அமைந்துள்ளது. கிழக்கில் இருக்கும் கட்டை கோபுரத்தின் வாயிலில் கற்பக விநாயகர்.மூன்றாம் பிரகாரத்தில் நகவிடங்கப்   பெருமான், நந்தி மற்றும் அறுபத்து மூவர் ஆகியோர் திருவுருவங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளன.  சிறிய மண்டபம் ஒன்றில் கலி நீங்கிய   நளன் திருவுருவமும் சிவலிங்கத் திருமேனியும் உள்ளது.


அறுபத்து மூவருக்கு எதிரில் தெற்கு வாயிலுக்கு  அருகில் தக்க்ஷணாமூர்த்தி சந்நிதி. கன்னிமூலையில் தல விநாயகர், சொர்ண விநாயகர் தஞ்சமளிக்கிறார்.


வள்ளி  தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருச்சன்னதி தனி ஆலையமாகத் திகழ்கிது.


தங்கமயமான கொடிமரம் கடந்து திரு அணுக்கன் திருவாயிலை அணுகினால் தர்ப்பாரண்யேஸ்வரரைக் கண்ணாரக் கண்டு கசிந்து உருகலாம்.


அன்னைக்குத்  தனிச்சந்நிதி. கருவறையில்  போகமார்த்த பூண்முலையாள் எழுந்தருளியிருக்கிறாள்.அன்னையின் சந்நிதிக்கு இடது புத்தில் இத்தலத்திற்கே சிறப்பான சனிபகவான் கட்டைக்  கோபுரச் சுவரில் உள்ள மாடத்தில் எழுந்தருளியுள்ளார்.


சனீஸ்வரர் , சூரியனின் இரண்டாவது மனைவியான சாயாதேவிக்கு இரண்டாவது மகனாகத் தோன்றியவர். இவருக்குச் சனைச்சரன், மந்தன், பங்கு எனப் பல திருநாமங்கள் உள்ளன. கருப்பு நிறத்தவர் ஆதலால் காரி எனவும் அழைக்கப்படுகிறார்.


சனீஸ்வரன் பெரிய தாயாரான சஞ்ஞீகையை அலட்சியப் படுத்தியதால்  அவரது இரண்டாவது மகனாகிய எமன் சினம் கொண்டு தனது தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்ததால் இவரது வலது முழங்கால் ஊனமானது.  இதனால் பங்கு என்று பெயர் வந்தது. பங்கு என்பதற்கு நொண்டி  என்று பொருள்.


ஆஞ்சிநேயரைச் சனிக்கிழமைகளில் வழிபட்டு வருவதாலும்  நீலக் கல்லை அணிவதாலும் கருப்பு நிற வஸ்திரத்தையும், எள்ளையும் தானம் கொடுப்பதாலும் , சனிக்கிழமைகளில் எள் தீபமிட்டுச் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வதாலும் சனிக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்:  திருநள்ளாறு


சுவாமியின் திருநாமம்:  ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் , சனீஸ்வரர்.


ங்கே உள்ளது:  தமிழ்நாட்டின் அருகில் புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில்.


ப்படிச் செல்வது: சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் காரைக்காலுக்கு ரயில், பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். காரைக்காலில் இருந்து பேருந்து, கார் மற்றும் ஆட்டோ மூலம் சென்றடையலாம்.


எங்கே தங்குவது:  காரைக்கால் மற்றும் கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும் , உணவு விடுதிகளும் உள்ளன.


தரிசன நேரம் : 

காலை  06.00 மணி முதல் பகல் 12.30

மாலை 5.00 முதல் இரவு 08.30

சனிக்கிழமை காலை 05.00 மணி முதல் இரவு 9.00 வரை

கோயில் முகவரி

நிர்வாக அதிகாரி

திருநள்ளாறு தேவஸ்தானம்,

திருநள்ளாறு அஞ்சல்,

காரைக்கால் 609606

தொலைபேசி : 0436 - 236530,236504