வலையுலக நண்பர்கள்

Wednesday, December 17, 2014

கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் ::

Puradsifm

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

_______________________________________________________

Tuesday, December 16, 2014

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

ராமன் ஜய்யங்கார்

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

*

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

*

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

*

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

*

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

*

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

*

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

*

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

*

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

*

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

*

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

*

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

*

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

*

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

*

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

*

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

***

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

*

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

*

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

*

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

*

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

***

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்

Tuesday, December 09, 2014

அடையாறு கேன்சர் ரிசர்ச் சென்டர்

தயவு செய்து அதிகமாக பகிரவும்
நண்பர்களே:-
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த
புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக
குணமாக்குவதற்கு புதிதாக
மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....
அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet"
ஆகும்.
இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள
கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக
வழங்கப்படுகிறது.....
அணுக வேண்டிய முகவரி :----
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241
நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு நன்றி சொல்ல
கடமை படுவோம்........."""

தேடிதரிசித்த திருதலங்கள் சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,

சுவாமி மலை, தஞ்சாவூர்
----------------------------------------------------------------------------------------------
'கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த தொடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த பெரியோனே
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து வரவேணும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க ணுறலாமோ
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த பெருமாளே.'
- அருணகிரி நாதர்

தமிழ்க்கடவுளான முருகப்பெம்மான் ஆறுபடைவீடுகளுள் ஒன்றான சுவாமி மலை தஞ்சையிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இரு நகரங்களிலிருந்தும் பஸ் வசதி கோயில் வரை உண்டு. திருவேரகம் என்ற புராணப் பெயர் கொண்ட இத்திருத்தலத்திற்கு அருகில் திரு புள்ளம் பூதங்குடி மற்றும் திரு ஆதனூர் என்னும் வைணவ திவ்யதேசங்கள் இரண்டு அமைந்துள்ளன. சுவாமி மலைக்கு வெகு அருகிலேயே திருவலஞ்சுழி என்னும் தென்க்ரைத் தேவாரத் திருத்தலமும் அமைந்துள்ளது. இவற்றை அடுத்தடுத்துக் காணலாம்.

தலபுராணம்

முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஞான வடிவாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்டிர் அணைத்து வளர்த்த கந்தன் ஒரு முறை படைப்புக் கடவுளான பிரமனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டு, அவர் பதில் கூறாதிருக்கவே அவரைச் சிறையிலிட, இதனால் தேவர்களும், இந்திரனும் சிவபெருமானிடம் முறையிட்டனர். எம்பெருமான் தன் பிள்ளையிடம் அம்மந்திரத்திரத்திற்கான பொருளை உரைக்கும்படி தன் மடியில் வைத்துக் கொண்டு வினவ, அவரது காதில் ஓம் எனும் மந்திரத்தின் பொருளை உணர்த்தினார் கார்த்திகேயன். தந்தைக்கே மந்திரம் சொன்னவர் என்பதால், பிள்ளையே சுவாமி ஆயினன். சுவாமிக்கே நாதன் என்றானதால் சுவாமி நாதனும் ஆயினன். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனும் ஆனான்.

ஞானத்தின் முன்னால் தகப்பன் மகன் என்ற உறவு கூடப் பெரிதல்ல என்பதை உணர்த்துவதே இத்தல புராணம்.

சுவாமிநாதர் என்றும் சுப்பையா என்றும் அழைக்கப் பெறும் வேலவன் இங்கு வள்ளி தெய்வயானை சமேதனாகக் காட்சி தருகிறான்.

மூலஸ்தானத்தில் முருகப் பெம்மானின் பீடம் ஆவுடையாகவும், அவர் பாண லிங்கமாகவும் அமைந்திருப்பதாக ஐதீகம். இதன் காரணமாக, இங்கு கதிர்வேலன் சிவ ரூபமாக விளங்குகிறான் என்று சொல்வர்.

இங்கு கோயிலை அடையக் கடக்க வேண்டிய அறுபது படிகள், அறுபது தமிழ் வருடங்களைக் குறிக்கும் என்று சொல்வர்.

தலச்சிறப்பு

குருமலை, குருகிரி என்னும் பெயர்களும் கொண்ட இத்தலம் கல்வி, கேள்வியிற் சிறந்து விளங்கவும், பரிபூரண ஞானமடையவும் வழிபடவேண்டிய கோயிலாகும்.
தந்தை மகன் உறவில் பிணக்குகள் தீர இது நிவர்த்தித் தலமாகும்.
ஹரிகேதன் என்னும் அரக்கனை வென்ற தலமாதலால், இது சத்ரு சம்ஹாரத் தலமுமாகும். ஜாதகத்தில் ஆறாமிடமான மறைமுக சத்ருக்கள் ஸ்தானத்தால் அவதியுறுவோர் இங்கு மயில்வாகனனைப் பணிந்து மனதில் அமைதி பெறலாம்.

தலப்பண்

எப்போதும் புத்திமதி பிள்ளைக் கியம்பிடுவான்
அப்பனென் றூரார் அறிந்ததை மாற்றியிவன்
தப்பாது ஓங்கா ரமுரைத்தே தானானான்
அப்பனாய் சாமிமலை ஆங்கு.

ஓம் சரவணபவ!

Monday, December 08, 2014

அமைதியும் , ஆனந்தமும் அருளும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி1879 ஆம் ஆண்டு டிசம்பர் முப்பதாம் தேதி இரவு மதுரை மாவட்டத்தில் திருச்சுழி கிராமத்தில் சுந்தரம்  அழகம்மையார் தம்பதிக்கு ரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேங்கடராமன் என்று பெயரிட்டு வளர்த்தனர்.
வக்கீல் தொழில் செய்து வந்தார் சுந்தரம் . அவருக்கு மூன்று மகன்கள்.கடைக்குட்டியாக ஒரு மகள்.
பள்ளியில் வேங்கட ராமன் ஒரு சாதாரண மாணவன். சிறு வயதிலிருந்தே அவன் உள்ளத்தில் அருணாசலம் என்னும்  வார்த்தை ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வார்த்தை உள்ளத்தில் ஒலிப்பதன் காரணமும் தெரியவில்லை. அருணாச்சலம் எங்கே இருக்கிறது என்பதும் தெரியவில்லை.
1896 ஆம் ஆண்டுவேங்கட ராமனுக்குப் பதினேழு வயது. பன்னிரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால் மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கி படிப்பைத் தொடர வேண்டிய சூழ்நிலை.http://www.theguruofyou.com/videolibrary/images/video-thumbs/kOxYJFJb7eM-0.jpg
வீட்டின் மாடியில் தனிமையில் வேங்கடராமன் உட்கார்ந்து இருந்தார்.அப்போது அவர் உள்ளதில் திடீரென்று ஒரு பயம் எழுந்தது.
அய்யோ நான் இறந்துவிடப் போகிறேன் இன்னும் சில நிமிடங்களில்.........
இந்தப் பயம் தோன்றியதும் வேங்கடராமன் மருத்தவரைத் தேடிஓடவில்லை . பெரியவர்கள் யாரிடமும் செல்லவும் இல்லை. தனக்குள் எழுந்த சிக்கலைத் தானே தீர்த்துக் கொள்ள முடிவு செய்தார். சாவு நெருங்கி விட்டது சாவு என்றால் என்ன?
 எது சாகிறது? இந்த உடல்தானே  செத்துப் போகிறது? ன்று கேட்டுக் கொண்டார். மரணத்தை அனுபவித்துப் பார்ப்பது  என்று தீர்மானித்தார். கை கால்களை நீட்டி பிம் போல் படுத்தார்.
உடம்பு செத்துவிட்டது. அப்புறம்? இதை மயானத்திற்குக் கொண்டுபோய் எரித்து விடுவார்கள்.....இது சாம்பலாய்ப் போகும்.
கற்பனையில் உடல் மயானத்திற்குச் சென்றது. எறியூட்டப்பட்டது. சாம்பல் மட்டுமே மிஞ்சியது.அதன்பின்னும் வேங்கடராமன் உள்ளத்தில் கேள்வி எழுந்தது.
உடம்பின்  முடிவுடன் நானும்   இறந்து விட்டேனா  ?இல்லையே உடல் சலனமற்றுக் கிடந்தபோதும் நான் மட்டும் எஞ்சி இருக்கிறேனே........  அதன்சக்தியை ஒளிவடிவமாக உணர முடிகிறதே...நானின் ஒலியும் ஒலிக்கிறதே?
வேங்கடராமனுக்கு உடலில் இருக்கும் நான் சாகவில்லை என்பதை சக்தி சொரூபமாக உணர முடிந்தது . நாத வடிவமாகக் கேட்க முடிந்தது.  அந்த நான் தான் உடலுக்குக் கட்டுப்படாத ஆத்மா என்ற உண்மை அனுபவ பூர்வமாக அவருக்குப் புரிந்தது.அந்த வயதிலேயே ஆத்ம தரிசனம் கண்டு விட்ட வேங்கடராமனால் வீட்டில் இருக்க முடியவில்லை.
அருணாச்சலம் திருவண்ணாமலையில் தான் இருக்கிறது என்பது உறவிர் ஒருவர் மூலம் தெரியவந்தது. படிப்பில் கவனம் செல்லவில்லை ஒரு நாள்வீட்டை விட்டு வெளியேறினார்.  திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கிழித்துக் கோவணமாக்கித் தரித்துக் கொண்டார்.
கோயிலுக்குள் நுழைந்து பாதாள லிங்கம் இருந்த இருட்டுக் குகையில் கோய் அமர்ந்தார். ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தார். எத்தனை  நாட்கள் அங்கே அமர்ந்திருந்தார் என்பது தெரியவில்லை. வேங்கடராமனின் உடலின் கீழ் பாகம் குகையில் குடியிருந்த பூச்சி, பூச்சிகளால் அரிக்கப்பட்டு,ரத்தமும், சீழுமாக ஆனது.
பாதாள லிங்கக்  குகையில் பால சந்நியாசி ஒருவர் நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதை சேஷாத்ரி சுவாமிகள் என்னும் சந்நியாசி கண்டறிந்தார்.அவரை மேலே தூக்கி வந்தார். அதன் பின்னரே பால சந்நியாசியைப் பற்றித் தெரியவந்தது.
மகனின் சந்நியாசத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தாய் அழகம்மாள், மூத்த மகனுடன் வந்துவேங்கட ராமனைப் பார்த்து வீடுதிரும்பச் சொல்லிக்  கதறினார். அவர் மசியவில்லை.
மகன் இனி உலக வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டான் என்று உணர்ந்து தாய் வருத்தத்துடன் திரும்பினார்.
அண்ணாமலையார் ஆலய மண்டபம், தோப்புகள்  போன்றஇடங்களில் தங்கியிருந்த சுவாமி, அருணாசலத்தின் மீதேறி விரூபாக்ஷி குகை என்னும் ஒரு குகையில் தங்கினார்.
அங்கே ஒருநாள் , வேலூரில் பள்ளி ஆசிரியராக இருந்த கணபதி முனிவர் என்பவர் சுவாமியிடம் வந்து உபதேசம் பெற்றார்.அவர்தான் சுவாமியை ஸ்ரீ ரமண மகரிக்ஷி என்று அழைத்தவர்.
விரூபாக்ஷி குகையில் இடம் போதாத சூழ்நிலை! மகரிக்ஷி இடத்தை மாற்ற முடிவு செய்தார். மலை மேல் ஏறிச் சென்றார்.
அங்கே ஓரிடத்தில் பாறைகளின் இடுக்கில் கனையொன்றின் ஊற்றுக் கண்ணிலிருந்து நீர் வற்றாமல் நீர் வந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதுதான் சரியான இடம் என்று பகவான் தீர்மானித்தார். கந்தசாமி என்னும் பக்தரின் உதவியோடுமுட்புதர்களை அகற்றி ,கல் வீடு ஒன்றை எழுப்பினார். கந்தசாமியின் முயற்சியால் எழுந்த ஆசிரமம் என்பதால் கந்தாசிரமம் என்றே அழைக்கப்படலாயிற்று.
1907 ஆம் ஆண்டு மகரிக்ஷியின் அன்னையும் ஊரிலிருந்துபுறப்பட்டு வந்து அவருடைனேயே தங்கி விட்டார். ஆசிரமவாசிகளுக்கும் வந்து போவோருக்கும் அன்னை அழகம்மாள் சமைக்கலானார்.
1920 ஆம் ஆண்டு அழகம்மாளின் டல்நலம் குன்றி, நோய்வாய்ப்பட்டு படுத்தார். ரமண மகரிக்ஷி அன்னையின் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். 1922 மே மாதம் பத்தொன்பதாம் தேதி இரவு எட்டு மணிக்கு அன்னையின் உயிர் பிரிந்தது. அன்னையின் உடல்  மலையடிவாரத்தில் ஒரு குழியில் இடப்பட்டது. ஒரு சமாதி எழுப்பப் பட்டது. சமாதி மேடை மேல் லிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ரமண மகரிக்ஷி கந்தாசிரமத்தை விட்டு வந்து அன்னையின் சமாதிக்கருகில் ஒரு கீற்றுக் கொட்டகையில் தங்கினார். அதுவே பின்னாளில் ரமண மகரிஷியின் ஆசிரமமானது.
மகரிஷி காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார்.வேத பாராயணம் தொடங்கும். அனைவரும் வேத பாராயணத்தைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1949 ஆம் ஆண்டு அன்னையின் சமாதி மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மாத்ருபூதேஷ்வர்ரை மையமாக வைத்து ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அதன் கும்பாபிஷேக விழாவில் மகரிஷி கலந்து கொண்டார்.அப்போதுஅவருக்கு வயது70
கந்தாசிரமத்தில் இருந்த காலத்திலேயே மகரிஷி கிரிவலம் செய்வது வழக்கம். ஆசிரமம் அமைந்த பின்னும் அது தொடர்ந்தது.
அதன் பின் மகரிஷியின் இடது முழங்கை மூட்டுக்கு கீழே ஒரு புற்றுநோய்க் கட்டி புறப்பட்டது. றுவை சிகிச்சை செய்து அகற்றியும்  அது வளர்ந்த வண்ணம் இருந்த்து. கதிர் இயக்க சிகிச்சைக்கும் , கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்கவில்லை.
1980 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 8 மணி 47 நிமிடம்…….  பகவான்  ரமணர் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
அந்த நேரத்தில் ஒரு எரிநட்சத்திரம் தோன்றி வான்வெளியில் குறுக்கே ஜோதியுடன் நகர்ந்து மறைந்தது.
அன்னையின் ஆலையத்தை அடுத்து பழைய கூடத்துக்கும் புதிய கூடத்துக்கும் இடையில் ஒரு குழிவெட்டி அதனுள் அவரது உடல் சமாதியாக வைக்கப்பட்டது . சமாதி மீது  பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமே  இனி ஒரு பகவானின் வெளிமுக உருவம் அன்பர்களின் இதயத்தில் பதிந்துவிட்ட அவரது திருவடிச் சுவடுகளே உள்முகம்.http://4.bp.blogspot.com/_0HNcQMg0Zm4/TKDBW5QLbFI/AAAAAAAAA4E/h6bELGYAcHs/s320/DSC_3508.JPG
சென்னையிலிருந்து 200கி,மீ தூரத்தில் இருக்கிறது. திருவண்ணாமலை இங்கிருக்கும் குன்றின் பெயர் அருணாசலம். ஆண்டவனே அசலமாக அமைந்திருப்தாக மகரிஷி அடையாம் காட்டிய குன்று இது.
இதன் தென் புற அடிவாரத்தில் ரமணாஷ்ரமம் அமைந்திருக்கிது. விசாலமான நிழலான  திறந்த வெளி அதையடுத்து அன்னையின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம்.
இதனையடுத்து ஒரு பெரிய மண்டபம் அங்கே பகவானின் சமாதி மேடை .மேடை மீது ரமணமகரிஷி தியானநிலையில் சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறார்.
ஜீவன் உறையும் பகவானே  அங்கு அமர்ந்திருப்பது போல் உள்ளுக்குள் ஓர் சிலிர்ப்பு  ஊடுறுவுகிறது . மனம் கல்வியை வேண்டுகிறது. பதவியைத் தேடுகிறது. பணத்தை நாடுகிறது, குடும்ப சுகத்திற்கு அழைகிறது  இவற்றை அடைய எங்கெங்கோ ஓடுகிறது.
எதனையோ தேடிய மனம் அமைதியைத் தேடியிருந்தால் இந்த அல்லாட்டம் இருந்திருக்காது. அமைதியை எங்கே தேடுவது. ரமணாஷ்ரமத்திற்கு வருகை தாருங்கள் எங்கெங்கோ தேடினோம் கிடைக்காத மனஅமைதி அங்கே கிடைப்பதை உணர முடியும் . குரங்காட்டம் போட்ட மனம் அடங்கி ஆனந்த அமுதக்கடலில் ஒரு துளியை ருசித்துப் பார்க்கும் . ஆசிரமத்தில் தங்க விருப்பமானவர்கள் முன் கூட்டியே ஆசிரமத்திற்கு எழுதி முறையாகப் பதிவு செய்ய வேண்டும். செய்துகொண்டால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.ஆசிரமத்திலேயே உணவும் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஸ்ரீரமணாஷிரமம்
 ,திருவண்ணாமலை, தமிழ்நாடு- 606 603
தொலைபேசி : 91-4175 237292 / 237200
Email: ashram@ramana-maharishi.org

திருத்தலக் குறிப்புகள்

அவதாரப்புருஷர் அடக்கமான  தலத்தின் பெயர் :

திருவண்ணாமலை

அவதாரப்புருஷரின் திருநாமம் :

ஸ்ரீரமண மகரிஷி

எங்கே உள்ளது?   சென்னையிலிருந்து-200கி.மீ தூரத்தில்.

எப்படிப் போவது?

சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் திருவண்ணாமலைக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்

எங்கே தங்குவது?

திருவண்ணாமலையில் நிறைய தங்கும் விடுதிகளும், உணவுவிடுதிகளும் உள்ளன.

தரிசன நேரம்

காலை 5 மணி முதல்    இரவு 8.30 மணி வரை.