வலையுலக நண்பர்கள்

Wednesday, December 23, 2015

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.


0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்க
Ethai ellarukkum share pannunga
  முக்கிய தகவல்
தயவுசெய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே ;- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை (blood cancer ) யையும் முழுதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தின் பெயர் " IMITINE FMERCILET " ஆகும் . இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது... அணுக வேண்டிய முகவரி ;- cancer institute adyar, east canal bank road Gandhi nagar adyar , chennai-6000020 land mark near Michael school.
DfPhone.....
044-24910754
044-24911526
044-22350241 நண்பeர்களே நம்மால் ஓருவர் பயன் அடையட்டுமே.

வாட்சப் கதைகள்

🌼ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்🌼
🌼அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
🌼மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
🌼""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன்.
அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
🌼இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
🌼 உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து
விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..
🌼 இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''
மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும்
காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.
🌼 அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.
🌼இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? அப்படியே செய்தார் அந்த மகானுபாவர். அவர் ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.
🌼மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.
மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
🌼""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''
மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி
தாங்காமல் மாண்டுவிட்டார்.
🌼இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.
🌼முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான
காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.
🌼மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.
இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது
🌼மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.
🌼ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
🌼அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.''
வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது.
🌼வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.
நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு
பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.
🌼நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே
கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
🌼எனக்குத் தெரிந்த ஒருவர் தன் நண்பரோடு கூட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
நண்பரை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் பணம் சுருட்டினார். கூட்டு வியாபாரம் நொடித்துப் போனது. தான் சுருட்டிய பணத்தை வைத்துக்கொண்டு புது வியாபாரம் தொடங்கினார். இந்த முறை தன் மனைவியை மட்டுமே கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டார்.
வியாபாரம் தழைத்தது.
🌼"அநியாயம் செய்தவன் அமோகமாக இருக்கிறானே' என்று அனைவரும் அங்கலாய்த்தார்கள்.
வருடங்கள் உருண்டோடின. அவரது மனைவிக்கும் வேறு ஒரு தொழிலதிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர் எப்படித் தன் கூட்டாளியின் பணத்தைக் கொள்ளை அடித்தாரோ, அதே பாணியில் இவரது மனைவி இவரது பணத்தைக் கொள்ளையடித்தார்.
🌼இன்று விவாகரத்தாகி, செல்வத்தை எல்லாம் இழந்து ஏறக்குறையத் தெருவில் நிற்கிறார் அந்த நபர்.
நீங்கள் செய்த வினை உங்களுடைய கன்றுக்குட்டி. ஆயிரம் பசுக்களுக்கு மத்தியில் அது உங்களைக் கண்டுபிடித்து உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.
🌼"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.
🌼 விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.
🌼இது
மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை🌼

தூய தமிழ்ச்சொற்கள்


ஆறு நிரம்பி,
ஏரி நிரம்பி,
கண்மாய் நிரம்பி,
கரணை நிரம்பி,
தாங்கல் நிரம்பி,
ஏந்தல் நிரம்பி,
ஊரணி நிரம்பி,
குளம் நிரம்பி,
குட்டை நிரம்பியது அன்று!
இன்று???
Courtesy: தூய தமிழ்ச்சொற்கள்
நீர் நிலைகளில் இத்தனை வகையா ?
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன்
குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி
அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு
மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.
.....

Thursday, December 17, 2015

பகவத்கீதை

சஞ்ஜயன் கூறினான்
மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அனுகிப் பின்வருமாறு கூறினான்
                 பகவத்கீதை 1:2
ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப்பாருங்கள்
                      பகவத்கீதை 1:3
அந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாலிகள் பலரும் இருக்கின்றனர்: யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.
                       பகவத்கீதை 1:4
மேலும் திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர்வீரர்கள் பலரும் உள்ளனர்.
                       பகவத்கீதை 1:5
வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் உள்ளனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்
                  பகவத்கீதை 1:6
ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்துகொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதிவாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.
                       பகவத்கீதை 1:7
மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியார்,அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்வரன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே
                  பகவத்கீதை 1:8
எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்தத்தில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்
                பகவத்கீதை 1:9
பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கமுடியாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே
                      பகவத்கீதை 1:10

பகவத்கீதை

திருதராஷ்டிரர் கூறினார்,
சஞ்ஜயனே, போர்புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?
           பகவத்கீதை 1:1

Tuesday, December 15, 2015

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் பற்றிப் பார்ப்போம்

சிவமயம் சிவாயநம
1. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
2. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
3. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
6. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
7. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
8. காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
9. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி ( கெட்டவிசயம்) தெரியாது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
10. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
11. சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
12. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
13. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்துக்  கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
14. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று  கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
15. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
16. அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
17. யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
18. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
19. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
20. சிங்கத்தின்  குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
21. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
22. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
23. எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீனான மனிதன் ஆவான்.
24. மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
25. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
26. கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
27. வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
28. பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
29. வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்தூய்மை வராது.
30. கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கிச்  செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களையும் தர்மங்களையும்  செய்யுங்கள்
திருச்சிற்றம்பலம்

Friday, October 30, 2015

சிட்டுக்குருவி

Puradsifm
செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று நினைக்கிறோம்!!! ஆனால்
உண்மை அது அல்ல
பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்
இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை
இது தான் நிதர்சனமான உண்மை...
எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்
நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்
அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து
எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில்
கட்டி தொங்க விட்டோம்
என்ன ஆச்சரியம் 20 வீட்டில்
18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது
இதை அதிகம் பகிறுங்கள்
நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள்
உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்
உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது..
ஓட்டுவீடு இல்லாதது ஒருகாரணம்
மற்றொன்று சிறுதானிய ( கம்பு, ராகி சோழம், சாமை, தினை, குதிரைவாலி) விவசாயத்தை மறந்துவிட்டு பணப்பயிறுகளான வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ததுதும் ஒரு காரணம் !
அவை வாழும் பகுதியில் தானியங்களை சிதறி வையுங்கள்
அவைகளுக்கு சிதறியவையே மிக பிடிக்கும்
அபுதாபியில் ஏராளமான சிட்டுகுருவிகள் உள்ளன

Thursday, October 15, 2015

Fwd: HOUSE READY FOR SALE

Kovilmedu thadagam road, 2.75cents, building plan aproved, north facing house, east facing site, near by main road
> Property details pls contact : 9865442911

Fwd: அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

நன்றி Satheesh T

இந்த உலகிற்க்கு
முதன்முதலில் அறுவை
சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள்
> 'இந்துக்கள்'
> அறுவை சிகிச்சையின் தந்தை
> சுஸ்ருதர் (காலம் கி.மு. 600)
> ...
> சுஸ்ருதர், உலகளவில்
> அனைவராலும்
> ஏற்றுக்கொள்ளப்பட்ட
> மருத்துவமாமேதை. இவர்
> ரிஷி விஸ்வாமித்திரருக்குப்
> பிறந்தவர். உலகின் முதல்
> அறுவை சிகிச்சை கலைக்
> களஞ்சியமான "சுஸ்ருத
> சம்ஹிதையை" மனித
> சமுதாயத்திற்க்கு
> வழங்கியவர். மயக்க மருந்து
> அறிவியல் மற்றும்
> பிளாஸ்டிக் சர்ஜரியின்
> தந்தையாகப்
> போற்றப்படுபவர்.
> .
> இவர் தமது சுஸ்ருத
> சம்ஹிதையில், பன்னிரண்டு
> விதமான எலும்பு
> முறிவுக்கும், ஆறு விதமான
> மூட்டு நகர்வகளுக்கும்
> உண்டான மருத்துவ
> முறையை விளக்கிருக்கிறார்.
> 125 விதமான அறுவை
> சிகிச்சை கருவிகளை
> உபயோகப்படுத்தியுள்ளார்.
> இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண
> சிகிச்சைக்கான
> சிறிய கத்திகள், இரட்டை
> விளிம்பு கத்திகள், வடிக்கும்
> ரப்பர் குழாய் மற்றும்
> மலக்குடல் சீரமைப்புக்
> கருவிகள் போன்றவை
> விலங்கு மற்றும்
> பறவைகளின் தாடை
> எளும்புகளில் இருந்து
> வடிவமைக்கப்பட்டவை.
> .
> இவர் மேலும் பல்வேறு
> தையல்
> முறைகளைப்பற்றியும்
> விளக்கியுள்ளார்.
> குதிரையின் முடி,
> மரப்பட்டைகளின் இழை,
> நரம்பு போன்றவற்றை
> நூலாக்க்
> கொண்டு தைத்திருக்கிறார்.
> சுஸ்ருத சம்ஹிதையில், 300
> விதமான அறுவை
> சிகிச்சை முறைகள்
> விளக்கப்பட்டுள்ளன.
> ஆச்சார்யர் சுஸ்ருதர்,
> மருத்துவ
> உலகின், குறிப்பாக அறுவை
> சிகிச்சையின் மாமேதை
> என்று
> போற்றப்படுகிறார்.

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
> Mohan Raj
>
> மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.
>
> இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -
>
> யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -
>
> அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "
>
> (சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).

முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை - 12–10–2015—நமது பித்ருக்கள் நம்மை ஆசிர்வதிக்கும் நன்நாள்...... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்
> >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
> இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
> பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
> நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.
>
> அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
> அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
> சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.
>
> அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
> பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்...
> மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங் களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படு கிறது.
>
> இது பிதுர் தேவதைகளுடைய திருப்தி யின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை சிறப்பு வாய்ந்ததாகும்.
>
> தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன்களைச் செய்வது சாலச்சிறந்தது.
>
> சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலஷேத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.
>
> தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படு கிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
>
> அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங் களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
>
> மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபாவசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார் களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.
>
> A.P.VidyaMani,
> AstroAnalyst & Gemologist
> 9943394405

Thursday, October 08, 2015

சிட்டு குருவிகள் எங்கே போயின

நன்விஜய் பிரசாத்

நேற்று ஒரு பதிவில் Bird feeder இருப்பதை பார்த்து சிட்டு குருவிகள் எங்கே போயின என்று இணையத்தில் படிக்க தொடங்கினேன்.
சிட்டுக்குருவிக்கு மருத்துவ குணங்கள்( சிட்டு குருவி லேகிய மேட்டர்) இருக்கின்றன எனும் தவறான நம்பிக்கைகளால் இவை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றனவாம்.
* நகரங்களில் கட்டிட அமைப்புகள் மாறி ஜன்னல், தாழ்வாரம், முற்றம் போன்றவை மறைந்து, கண்ணாடி சூழப்பட்ட குளிர்வறைகளாக மாறி வருவதால் மனிதர்களுடனே சேர்ந்து வாழ்ந்த குருவிகளுக்கு இருப்பிடமின்றிப் போய்விட்டதாம்
* சிறு மளிகைக் கடைகள் மறைந்து. பல்பொருள் அங்காடிகளாக மாறுவது அவற்றிற்கு சிந்தும் தாணிய உணவு கிடைக்க வழியில்லாமல் செய்து விடுகிறதாம்,
* மேலும் நகரங்கள், மரம், செடி, கொடி போன்றவைகளை இழந்து கான்க்ரீட் காடுகளாகி வருவது குருவிகள் வாழ்விற்கு ஏற்றதாக இல்லையாம்.
* குளம், குட்டை போன்றவை மறைந்ததால் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
* ஒலி மாசும் ஒரு பெரிய எதிரியாக சொல்லப்படுகிறது.
* அலைபேசிக் கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினாலும் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுகின்றனவாம்.
* கிராமங்களில் விவசாய நிலங்கள் குறைவதால் சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரிதாகி இவை அழிகின்றனவாம்.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் அழிகின்றனவாம்.
* இவையெல்லாவற்றையும் விட சிட்டுக் குருவிகள் அழிவிற்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றிக் கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தானாம். DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்குத் தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேரிடுகிறது எனப் பல பறவையியலாளர்கள் சொல்கின்றனர்.
தற்போது இதை உணர்ந்து சிட்டுக் குருவிகள் அழிவை தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இவற்றிற்கு தானியங்கள், நீர் வைக்க பரிந்துரைக்கப் படுகிறது. இவைகளுக்கு சிறு அட்டைப் பெட்டி, மரத்தாலான வீடுகளும் அமைக்கப்படுகிறது.

சிட்டுக்குருவி பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய 'நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,' (SAVE OUR SPARROWS) (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:- http://www.natureforever.org/
.
ஓசூர் அடுத்த, கும்மாளாபுரம், கொத்தகொண்டப்பள்ளி, முத்ததுார், தளி சுற்று வட்டார பகுதிளில் உள்ள மொத்தம், 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டு தற்போது, 80 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஆனைக்கல் பகுதியில், 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இதில், 20 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்கப்பட்டள்ளது. இந்த முயற்சியால் தற்போது, 10 ஆயிரம் வீடுகளில் சிட்டு குருவிகள் வாழ்வதற்கு வசதியாக அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளது.
.

Tuesday, September 15, 2015

பிரதோஷ விரத மகிமைகள்

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

Sunday, September 06, 2015

பட்டுப்புடவை வாங்குவதற்கான குறிப்புகள்:

உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் பட்டுபுடவைகள் வாங்கவேண்டும். பார்ப்பதற்கு ஆடம்பரமாய் இருப்பதைக்காட்டிலும் உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்வதே புடவையை இன்னும் எடுப்பாய் காட்டும்.

உடலமைப்பு சற்று பருமனாக இருப்பவர்கள், மென்பட்டு, கோரா பட்டு, திசு பட்டு ஆகிய வகைகளை தவிர்ப்பது நல்லது. அது உடலை மேலும் வெளிப்படுத்தும்படியாக இருக்காது. அவர்களுக்கு மிருதுவான சிபான், கிரேப் போன்ற ரகங்கள் பொருத்தமாக இருக்கும்.

உடலமைப்பிற்கு ஏற்றாற்போல் பட்டுப்புடவை வாங்குவதற்கான குறிப்புகள் :

    பருமனான உடலுடைய பெண்கள் ஜார்ஜெட், சிபான் (அ) சிக்னான் ஆகிய ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும். கனமான மைசூர் பட்டு புடவை ரகங்கள் அவர்களை சற்று ஒல்லியாக காட்டும்.
    மெல்லிய பெண்கள் Organza, பருத்தி, திசு மற்றும் டசர் ரக புடவைகள் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த புடவைகள் ஒரு முழுமையான தோற்றத்தை அளிக்கின்றன. இந்த துணிகள் ஒல்லியான பெண்களுக்கு மிக அதிக ரகங்களை வைத்துள்ளது.
    உயரம் குறைவான பெண்கள், சன்னமான பார்டர் அல்லது பார்டரே இல்லாத புடவைகளை வாங்க வேண்டும். பெரிய பார்டர் புடைவைகளை அவர்கள்  கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பெரிய பார்டர் புடவைகள் அவர்களை இன்னும் குள்ளமாக காட்டும்.
    உயரமான பெண்கள் பெரிய பார்டர் உள்ள புடவைகளை வாங்கவேண்டும்.
    அடர் மாநிற பெண்கள் எப்போதும் கருஞ்சிவப்பு, பச்சை, அடர்த்தியான பிங்க் போன்ற நிற புடவைகளையே தேர்வு செய்ய வேண்டும்.


புடவை அணிவதற்கான குறிப்புகள்:
முதல் நிலை :

    ஒன்று உள்பாவாடை. இது இடுப்பிலிருந்து பாதம் வரை இருக்கும் ஒரு ஆடை. ஒரு நாடாவினால் இடுப்போடு இறுக்கப்பட்டு இருக்கும். இந்த ஆடை புடவையின் அடிப்படை நிறத்திற்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும். இது அணிந்தபிறகு எந்த இடத்திலும் வெளியே தெரியாதவாறு இருக்கவேண்டும்.
    ப்ளவுஸ் : இது சரியான அளவில், புடவையின் நிறத்தை ஒத்திருக்க வேண்டும். இது ஸ்லீவ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆக இருக்கலாம். மார்பு பகுதியின் கீழே முடிவடையுமாறு இருக்கவேண்டும்.


இரண்டாம் நிலை :

    புடவை அணியும்போது மேல் பகுதியை தொப்புளின் அருகே உள்பாவடையின் மேல்புறத்தில் சொருகவேண்டும். மொத்த புடவையும் இடது கைப்புறமாக வருமாறு பார்த்துக்கொண்டு, புடவை தரையை தொடுமாறு அணியவேண்டும். இப்பொழுது புடவையை உங்களைச்சுற்றி ஒரு சுற்று சுற்றி, வலதுபுறத்தில் உங்களின் முன்பகுதிக்கு வருமாறு அணியவேண்டும்.


மூன்றாம் நிலை :

    தோராயமாக 5  அங்குல அளவில், 5  முதல் 7  மடிப்புகளை சொருகியுள்ள பகுதி வரை மடிக்கவும். மடிப்புகளை சரியாக பிடித்து சேர்த்து கீழேவரை மடிப்பு சரியாக உள்ளதா என பார்த்து சரி செய்யவும். ஒரு சேப்டி பின்னை வைத்து மடிப்பு கலையாமல் பார்த்துக்கொள்ளலாம்.


நான்காம் நிலை :

    மடிப்புகளை சரியாக பிடித்து தொப்புளின் இடது ஓரமாக உள்பாவடையில் சொருகவும்.


ஐந்தாம் நிலை :

    மீதமுள்ள புடவையை இன்னொருமுறை இடத்திலிருந்து வலமாக  உங்களைச்சுற்றி கொண்டுவந்து, உங்கள் இடுப்பின் முன்பகுதிக்கு கொண்டுவந்து புடவையின் மேல் பார்டர் பகுதியை கையில் பிடிக்கவும்.


ஆறாம் நிலை :

    மீதமுள்ள புடவையின் பகுதியை சிறிது உயர்த்தி உங்கள் பின்பகுதியில் கொண்டுவந்து வலது கையின் கீழே கொண்டு வந்து உடலின் குறுக்காக கொண்டுசென்று  இடது கையின் மேலே போடவும். இப்போது புடவையின் மீதி பகுதி உங்கள் முழங்கால்களின் அளவிற்கு வந்து விழுந்திருக்கும்.

    இடது தோள்பட்டையிலிருந்து இறங்கியிருக்கும் புடவையின் பகுதியை பல்லவ் அல்லது பல்லு என்பார்கள். அந்த பகுதி தோள் பட்டையிலிருந்து சரிந்து வராமல் இருக்க தோள்பட்டையின் ப்ளவுஸ் உடன் இணைத்து சேப்டி பின் அணிந்துகொள்ளலாம்.


புடவை பாதுகாப்பு / பராமரிப்பு / சலவை குறிப்புகள்

சலவை

    முதல் சலவையின்போது, பட்டுப்புடவையை உப்புத்தண்ணீரில் ஊறவைத்து, குளிர்ந்த தண்ணீரில் அலச வேண்டும். துவக்கத்தில் சோப்பு பயன்படுத்தவேண்டாம். இரண்டு அல்லது மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் சலவை செய்யவும்.
    அதற்குபிறகு, மிதமான சோப்புத்தூள் பயன்படுத்தி விரைவாக அலசிவிடவும்.
    துவக்கத்தில் முந்தி மற்றும் பார்டர் பகுதிகளை தனித்தனியாக துவைக்கவேண்டும்.
    பிற ரசாயனங்களை சலவைக்கு பயன்படுத்த வேண்டாம். அது புடவையின் ஆயுளைக்குறைக்கும்.
    பிரஷ் கொண்டு துவைப்பதோ, அடித்து துவைப்பதோ வேண்டாம். அது ஜரிகையினை சேதப்படுத்தும்.
    பட்டுபுடவையினை பிழிவதோ, முறுக்கி துவைப்பதோ வேண்டாம்.
    ஈரத்துடன் நீண்ட நேரம் சுருட்டி வைத்திருக்காதீர்கள்.


உலர்த்துதல்

    சலவை முடிந்த உடனேயே புடவை உலர்த்தப்பட வேண்டும்.
    முதலில், ஒரு உலர்ந்த துண்டால் புடவையினை சுற்றி அதன் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும்.
    அதன்பிறகு, ஹேங்கரில் மாட்டி உலர்த்தவும்.
    நேரடியான சூரிய வெப்பத்தில் உலர்த்தவேண்டாம்.


உலர் சலவை

    உலர் சலவையில், திரவங்களைக்கொண்டே பட்டுபுடவையில் உண்டான கரைகளை நீக்குகிறார்கள்.
    திரவங்களில் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவோ, தண்ணீரே இல்லாமலோதான் இருக்கும். ஆகையால் அவை தண்ணீரைப்போல பாட்டின் இழைகளுக்குள் ஊடுருவாது.
    பட்டினை பராமரிப்பதற்கு உலர் சலவைதான் மிகச்சிறந்த வழி.
    உலர்சலவைக்கு கொடுக்கும்முன் கவனிக்கவேண்டியவை :
        கரை படிந்த ஆடைகளை உடனடியாக சலவைக்கு கொடுக்க வேண்டும்.
        எப்படி கரையானது என்று தெளிவாக கூறவும்.
        கண்ணுக்கு தெரியாத கரைகளையும் சுட்டிக்காட்டவும்.
        பளபளப்பு குறைந்த, நிறமிழந்த இடங்களை சரியாக சுட்டிக்காட்டினால், சலவையாளர் அதனை சரி செய்ய இயலும்.


இஸ்திரி

    இஸ்திரியை வைத்து அழுத்தும்போது மிதமான சூட்டில் வைக்கவும்.
    275 க்கு குறைவான வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஈரப்பதமுள்ள அல்லது நீராவி இஸ்திரி கொண்டே இஸ்திரி செய்யவும்.
    கஞ்சி இடப்பட்ட ஆடைகளுக்கு தனிக்கவனம் எடுக்கவும்.


மடித்து வைத்தல்

    புடவையை எப்போதும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில்தான் வைக்கவேண்டும்.
    ஜரிகை உடைவதை தவிர்க்க, புடவையின் மடிப்பை மாதம் ஒருமுறையேனும் மாற்றி வைக்கவும்.
    அனைத்து பட்டு ஆடைகளும் மெல்லிய துணிகளில் சுற்றி வைக்கலாம்.
    எம்ப்ராய்ட்ரி ஆடைகளை மடித்து வைக்கும்போது, ஆடைகளுக்குள் உராய்வு குறைவாக இருக்குமாறு பார்த்து மடித்து வைக்கவும்.
    பட்டு ஆடைகளை மாட்டி வைப்பதே பராமரிப்பதற்கு சிறந்த வழி.
    சுருக்கமடையாத ஆடை ரகங்களை நுட்பமாக கையாள வேண்டும்.


பட்டு புடவைகளை பராமரித்தல்

உலர் சலவையே சிறந்தது:
பொதுவாக பாட்டு புடவைகளை உலர்சலவைதான் செய்யவேண்டும். கைகளால் சலவை செய்யும்போது பட்டின் நிலைத்தன்மை மாறி, நிறமிழந்து பளபளப்பு குறையலாம். க்ளோரின் சலவை செய்வது பட்டினை சேதப்படுத்தி மங்கிட  செய்துவிடும்.

பட்டினை சலவை செய்தல்:
ஆடைகளுக்கு தகுந்தாற்போல சலவைக்குறிப்புகளை கையாள வேண்டும். ரா சில்க், சீனா பட்டு, இந்திய பட்டு, கிரேப், பொங்கி, ஷாண்டங், டஸார், டூபியான் மற்றும் ஜக்கார்டு புடவைகளை சலவை செய்வது சுலபம். சலவை முடிந்த உடனேயே புடவை உலர்த்தப்பட வேண்டும். முதலில், ஒரு உலர்ந்த துண்டால் புடவையினை சுற்றி அதன் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும். அதன்பிறகு, ஹேங்கரில் மாட்டி உலர்த்தவும்.

கரைகளை களைவது:

    புரதக்கறை:
    இவை முட்டை, மாமிசம், ரத்தம், வாசனை திரவியங்கள், பழச்சாறுகள், வேர்வை போன்ற கறை வகைகளை உள்ளடக்குகின்றன. இதுபோன்ற கரைகளை அகற்ற, முதலில் சோப்பினை உபயோகிக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் ஊறவைத்து சலவைக்கு போட வேண்டும். இன்னும் கடுமையான கறைகள் எனில், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் NH2 ஒரு சில துளிகள் கலந்து கறையான இடத்தில் தேய்க்கவேண்டும்.
    கலவையான கறைகள் :
    இவை சாக்லேட், குழம்பு, ஐஸ் க்ரீம், பால் உள்ளிட்ட கரைகளாகும். முதலில் ஒரு உலர்சலவை கரைப்பான் பயன்படுத்தி உலர்த்த வேண்டும். கறை படிந்த பகுதியினை திரவ சோப்பு கொண்டு கழுவி சலவை செய்யலாம். கறை நீக்கியினை பயன்படுத்தியபிறகு, பட்டாடையினை வெந்நீரில் சலவை செய்ய வேண்டும்.
    நெயில் பாலிஷ் கறை :
    நெயில் பாலிஷ் கறை படிந்த இடத்தில் அசிட்டோன் கொண்டு தேய்த்தால் கறை நீங்கும்.
    உதட்டுச்சாய கறைகள் :
    முதலில் உலர்சலவை திரவங்களும் பிறகு, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சலவை செய்தால் உதட்டுச்சாய கரைகளை நீக்கலாம்.
    கிரீஸ் கறைகள் :
    இவை பெரும்பாலும் எண்ணெய், வெண்ணெய், மார்கரின், கிரேயான் பென்சில் கறைகள், மருந்துகள், எண்ணெய் போன்ற ஒப்பனை பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. சோப்புக்கட்டி வைத்து அடித்து துவைப்பது கரையினை மேலும் அடர்த்தியாக்கும். சோப்பு பயன்படுத்தி கறைபடிந்த இடத்தில் தேய்த்த பிறகு, வெந்நீரில் சலவை செய்யவும்.


ஆடைகளின் வண்ணங்களை சரியாக பராமரிக்கவும் :

    பட்டடைகளுக்கு:
    பட்டாடைகள் உலர் சலவை மட்டுமே செய்யப்படவேண்டும். வீடு சலவை தவிர்க்கவும்.
    பாதுகாப்பு குறித்த லேபிளை படிக்கவும் :
    ஒரு சில வினாடிகள் செலவழித்து பாதுகாப்பு குறித்த லேபிளை படிப்பது, சலவை செய்து முடித்த பிறகு வரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும். குளிர்நீரில் மட்டுமே சலவை செய்யக்கூறும் குறிப்புகளை கவனமாக படிக்கவும். உலர்துவதைப்பற்றி உள்ள குறிப்புகளையும் படிக்க தவறாதீர்கள். அந்த ஆடைகள்  எப்படிப்பட்ட நிலையில் உலர்தப்படவேண்டுமென்று அந்த குறிப்புகளில் உணர்த்தப்பட்டு இருக்கலாம்.
    அடர்நிற ஆடைகளை ஒன்றாக சலவை செய்யவும் :
    ஆடைகளை வரிசைப்படுத்துவது, பாதுகாப்பு குறிப்பை கவனிக்கவும், சலவை முறை கண்டறிந்து வகைப்படுத்தவும் உதவியாக இருக்கும். வெண்ணிற ஆடைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு அடர்நிற ஆடையினை துவைத்த பலருக்கு இந்த நிறம் மங்கும் விஷயம் புரிந்திருக்கும். நிறமிழப்பதை தவிர்க்க, ஆடைகளை நிறவரிசைப்படுத்துங்கள்.
    ஆடைகளை உள்வெளியாக மாற்றி சலவை செய்யுங்கள் :
    சலவை செய்யும்போதும், உலர்த்தும்போதும் ஆடைகளை உள்வெளியாக மாற்றினால், ஆடையில் ஏற்படும்  கிழிசல்களை தவிர்க்க உதவும். ஆடைகளை வெளிப்புறம் சலவை செய்வதும் உலர்த்துவதும் கடுமையாக இருக்கலாம். இது ஆடைகள் மங்கிப்போவதையும் குறைக்கும். குறிப்பாக ஆடைகளை உலர்த்தும்போது, இதனை பின்பற்ற மறக்காதீர்கள். ஏனெனில் சூரியன் ஒரு மிகச்சிறந்த உலர்த்தும் கருவி. அது உங்கள் ஆடைகளின் நிறத்தினை மங்கிடச்செய்யும்.
    சலவை இயந்திரத்தில் ஆடைகளை துணிக்க வேண்டாம் :
    சலவை இயந்திரத்தில் ஆடைகளை ஒன்றாக திணிப்பது வேலையை குறைக்கும் என்பதால் இதனை பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவர். அது வேலையை குறைக்குமே தவிர, இயந்திரத்தை கடுமையாக இயக்க வைத்து நமது ஆடைகளை சேதப்படுத்தும். மேலும் இது ஆடைகளை முழுமையாக சுத்தப்படுத்தாமலும், சோப்பினை ஆங்காங்கே தங்கிடச் செய்யும். இதைப்போலவே ஆடைகளை திணிப்பது  இயந்திரத்தின் உலர்த்தும் பகுதியிலும் உலர்த்துவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும். சலவை இயந்திரத்தினுள் ஆடைகள் இலகுவாக இயங்க விடவேண்டும்.
    குளிர்நீரில் சலவை செய்யவேண்டும் :
    இது பலரின் இல்லங்களில் எழுதப்படாத நியதியாக உள்ளது. நிறங்களுடைய ஆடைகளை நிரமிழக்காமல் பாதுகாத்திட குளிர்நீரில்தான் சலவை செய்யப்படவேண்டும். பல காலங்களாக டிடர்ஜென்டுகள் மூலம் சலவை சியும் முறையானது குளிர்நீரில்தான் பின்பற்றப்பட்டு வருகின்றது.
    அளவுக்கதிகமாக உலர்த்துவது வேண்டாம் :
    நாம் அதிகமான நேரம் உலர்த்துவதை சாதரணமாக செய்துவிடுகிறோம். இது நம் அடர்நிற மற்றும் நல்ல நிறமுள்ள ஆடைகளுக்கு நல்லதல்ல. அளவுக்கதிகமாக உலர்த்துவது நிறங்களை மங்கிடச் செய்யும். சலவை இயந்திரத்தில் உலர்த்தும்போது உலர்த்தும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். இயந்திரத்திலிருந்து உலர்த்தி எடுக்கும்போது சற்றே ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
    வினிகர் சேர்க்கவும் :
    வினிகருக்கு இனிமையான மணம் இல்லையென்றாலும் சலவையில் ஒரு கப் வினிகர் சேர்த்துவது, ஆடைகளை இயற்கையான முறையில் மிருதுவாக வைக்கவும், நிறமிழக்காமல் இருக்கவும் உதவுகிறது. வினிகரின் மணம் சலவியின்போது நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    இயந்திரத்தில் மிதமான சுழற்சி / மிதமான டிடர்ஜென்ட் பயன்படுத்தவும் :
    உங்களின் தனித்துவமான ஆடைகளை நன்றாக பராமரிக்க எப்பொழுதும் சலவை இயந்திரத்தில் மிதமான வேகத்தில் இயக்கவும், கைகளால் சலவை செய்வதையும் பின்பற்றுங்கள். நிறைய டிடர்ஜெண்டுகள் நிறங்களை மங்கிடாமல் பாதுகாத்து சலவை செய்வதற்கென்றே இருக்கின்றன.

Sunday, June 14, 2015

நவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு

தோஷங்கள் விலக்கி நலன்கள் அருளும் நவகிரஹ தலதரிசனம்


நவகிரக தலங்களும் கும்பகோணத்தைச் சுற்றி சுமார் அறுபது கி.மீ  சுற்றளவில் அமைந்துள்ளன. பக்தர்கள் ஒரே சமயத்தில் ஒன்பது தலங்களுக்கும் சென்று வழிபட விரும்பினால் கும்பகோணத்துக்குச் சென்று விடுதி எடுத்துத் தங்கிக் கொள்ளலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வருவதற்கு சுமார் மூன்று நாட்கள் பிடிக்கும்.

சுற்றுலா நிறுவனங்கள் கார் மற்றும் வேன்கள் மூலம் ஒன்பது கிரகதலங்களுக்கும் பக்தியாத்திரையாக அழைத்துச் செல்கின்றன. இவற்றின் மூலமாக நவகிரக தலங்ளுக்குச் சென்றால் ஒரே நாளில் அனைத்துத் தளங்களுக்கும் சென்று வரலாம். செலவும் அதிகமாகாது. வீண் அலைச்சலையும், உடல் அசதியையும் தவிர்க்லாம். நான்கு பேர் என்றால் தனிப்பட்ட முறையில்கார் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.அதற்கு மேற்பட்ட குழு என்றால் வேன் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.  

                                                       
வறட்சி நீக்கி வளம் சேர்க்கும் கணபதி அக்ரஹாரம் மஹாகணபதி
நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 

நவகிரக தல வழிபாட்டுப்பின்னணி - 2 

நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி -3 

                            

சுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான் 
   
                                                          சூரிய பகவான்  வாழ்வை வளர்பிறையாக்கும் திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன்  

                                                          சந்திர பகவான் 

பிணி நீக்கி வளம் சேர்க்கும் புள்ளிருக்குவேளூர் வைத்திய நாதர் மற்றும் அங்காரகன் 

                                                         செவ்வாய் - அங்காரகன் சுபமும், சுகமும் அருளும் திருவெண்காடு சுவேதாரேண்யேசுவரர் மற்றும் புதன் 

                                                           புதன் - வித்யாகாரகன்                                      


அஞ்ஞானம் அகற்றி நல்ஞானம் நல்கும் ஆலங்குடி ஆபத்சகாயர் மற்றும் குரு பகவான்  

                                   குரு பகவான் சித்தம் தெளியவைத்து , பாவங்கள் போக்கும் திருக்கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரன்


                                      வெள்ளி - சுக்கிரன்


அள்ள, அள்ளக்குறையாமல் கொடுக்கும் வள்ளல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரர்


                                                             சனி பகவான்     


                                   
 நாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு


                                                                     ராகுபகவான் 


வறுமை நீக்கி,வளமை சேர்க்கும் நாகநாதன் கோயில் மற்றும் கேது  


                                                                  கேது பகவான்அமைதியும் , ஆனந்தமும் அருளும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி